இனி இன்ஸ்டாகிராம் மூலமும் பர்சேஸ் செய்யலாம்.!

இன்ஸ்டாகிராம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருக்கிறது.

|

இன்ஸ்டாகிராம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை பெரும்பாலும் அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இனி இன்ஸ்டாகிராம் மூலமும் பர்சேஸ் செய்யலாம்.!


நீங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று அதன் செட்டிங்கில் பார்த்தால் புதிய ஆப்சன் ஒன்று தோன்றியிருப்பதை அறிவீர்கள். இதில் உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பதிவு செய்ய சொல்லும். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் தங்களுக்கு தேவையானதை பர்சேஸ் செய்ய உதவுகிறது. இந்த பேமெண்ட் வசதியில் மூன்று டேப்கள் இருக்கும். அதில் நான் சமீபத்தில் என்ன பர்சேஸ் செய்தோம் என்ற விபரம் காணப்படும். புரொபைல் டேப்பிள் பயனாளிகளின் கார்ட் விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் பதிவு செய்ய வேண்டும்,. மேலும் உங்கள் கார்டு பாதுகாப்பை கருதி அதில் நீங்கள் ஒரு பின் எண்ணை உருவாக்க வேண்டும்

தொழிலதிபர்களுக்கு அவ்வப்போது தாங்கள் என்ன பர்சேஸ் செய்தோம் என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆப் உதவுவதோடு, ரெஸ்டாரெண்ட்களில் முன்பதிவு செய்யவும் இந்த இன்ஸ்டாகிராம் மூலம் உதவுகிறது.

இன்ஸ்டாகிராமின் இந்த நேட்டிவ் பேமெண்ட் வசதி ஒரு செயலியின் ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்படுகிறது. குறிப்பாக ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் நிறுவங்களுக்கு இந்த சேவை பெரிதும் உபயோகமாக உள்ளது.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் F8 டெவலப்பர் மாநாட்டின் அதன் நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் விரைவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த செயலியில் விரைவில் ஒரு ஃபில்டர் வசதியை கொண்டு வரவிருப்பதாகவும், இதனால் தேவையற்ற கமெண்ட்டுக்கள் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் அடுத்து வரும் அப்டேட்டுக்காக எக்ஸ்புளோர் டேப் தோன்றவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

மேலும் இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் மேலும் சில வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக கேமிரா மூலம் ஸ்லோமோஷன் வீடியோக்களை ரிக்கார்ட் செய்வது மற்றும் மியூட் பட்டன் வைப்பது ஆகியவை ஆகும்,.

இனி இன்ஸ்டாகிராம் மூலமும் பர்சேஸ் செய்யலாம்.!


இந்த இன்ஸ்டாகிராம் செயலியை ஆய்வு செய்துவரும் வோங் என்பவர் இந்த செயலியில் இன்னும் அதிகப்படியான வசதிகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் இதற்கான சோதனை நடந்து வருவதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம் தனது பயனாளிகளுக்கு கொடுக்கும் உறுதிமொழி என்னவெனில், பயனாளிகளின் தகவல்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் பகிரப்படாது என்றும், மேலும் மென்மேலும் இன்னும் அதிக வசதிகளை தங்கள் பயனாளிகளுக்கு செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram rolls out support for native payments ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X