இனி டிக்டாக் நினைப்பே வராது.! இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.!

|

டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது, குறிப்பாக இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக

இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

குறிப்பிடப்பட்டுள்ள செயலிகள் மூலம்

இதில் குறிப்பிடப்பட்டுள்ள செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்படுகிறது.

வீடியோ, வீ-சேட், ஷேர்-இட்,

அபஸ் ப்ரவுசர், விவா வீடியோ, வீ-சேட், ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக், விஹோ வீடியோ, பிகோ லைவர், எம்ஐ ஸ்டோர், 360 செக்யூரிட்டி, டியூ பேட்டரி சேவர், டியூ ப்ரவுசர், டியூ க்ளீனர், டியூ ப்ரைவசி, க்ளீன் மாஸ்டர், ஹலோ, லைக், க்ளப் பேக்டரி, போன்ற செயலிகள் தடைசெய்யப்பட்டவை ஆகும்.

இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்!

டிக்டாக் செயிலையை போன்று

இந்நிலையில் டிக்டாக் செயிலையை போன்று வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி, சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

 இந்த புதிய ரீல்ஸ் வசதி ஆனது டிக்டாக் போலவே

இன்ஸ்டாகிராம் செயலியில் வரும் அந்த புதிய வசதியின் பெயர் ரீல்ஸ் அகும். இந்த புதிய ரீல்ஸ் வசதி ஆனது டிக்டாக் போலவே பின்னணி இசையில் 15நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் அனைத்து

எனினும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய தகவல்களின்படி புது அப்டேட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசதி கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்க்கும் பல்வேறு அப்டேட் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PUBG மொபைல் கேம் தடை செய்யப்பட்டால்! உடனே இதைச் செய்யுங்கள் - கவலை வேண்டாம்!

10ஆயிரத்திற்கும்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இதில் ஏற்கனவே 25மொழிகளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் முன்னனி இசை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பிரேசில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த சோதனையை முயற்சியை தொடங்கியுள்ளது.

போன்றே ரீல்ஸ் அம்சத்திலும்

குறிப்பாக டிக்டாக் போன்றே ரீல்ஸ் அம்சத்திலும் வீடியோக்களை எடிட் செய்து பதிவேற்றம் செய்ய முடியும் என்பதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Instagram Reels Short Video Feature Launched in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X