இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

|

இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் டிக்டாக் செயலி இல்லை என்பதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
வசதியை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

 டிக்டாக் செயலிக்கு போட்டியாக

குறிப்பாக டிக்டாக் செயலிக்கு போட்டியாக துவங்கப்பட்டது தான் இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதி. தற்சமயம் இதில் பயனர்களை 30 விநாடி
வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கும் என்று சமூக ஊடக தளம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

 15விநாடிகள் வரை

முன்னதாக பயனர்கள் இதில் 15விநாடிகள் வரை மட்டுமே வீடியோவைப் பதிவு செய்ய முடியும். குறிப்பாக இன்ஸ்டாகிராமிலும் வேறு சில அம்சங்கள் கிடைக்கின்றன, இப்போதுபயனர்கள் ஒரு வீடியோவைப் பதிவுசெய்யும்போது டைமரை 10 வினாடிகள் (short video) வரைநீட்டிக்க முடியும், மேலும் ஒரு வீடியோவைப் பதிவுசெய்த பிறகு அதை நீக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!சத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! முழுவிவரங்கள்.!

 தகவலின்படி இந்த புதிய அம்சங்கள்

வெளிவந்த தகவலின்படி இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமின் சமீபத்திய புதுப்பிப்பில் பயனர்களுக்கு மிக விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50நாடுகளில் ரீல்ஸ் கிடைக்கிறது. அங்கு பயனர்கள் வரவிருக்கும் புதிய அம்சங்களை அனுபிவிக்க முடியும்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் இயக்குனர்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் இயக்குனர் டெஸ்ஸா லியோன்ஸ்-லாயிங் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால்,பயனர்களிடமிருந்து ஏராளமான பொழுதுபோக்கு, ஆக்கபூர்வமான உள்ளடக்கங்களைக் கண்டிருப்பதால், பயனர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்தஅம்சத்தை மேம்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் குறுகிய வீடியோக்களை

இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குறுகிய வீடியோக்களை உருவாக்க உதவுகிறது, பின்பு இப்போது 30 விநாடி வீடியோக்களை பதிவு செய்யலாம். அவர்கள் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் ரீல்களை ஒரு பிரத்யேக பிரிவில் சேமிக்கவும் முடியும்.

மைப்பு அதன் புதிய அம்சங்களை

இன்ஸ்டாகிராம் அமைப்பு அதன் புதிய அம்சங்களை மக்கள் பயன்படுத்த எளிதாக்குகிறது, இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பின்பு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதி கூட டிக்டாக் போன்றே அம்சங்களை வழங்குகிறது.

வேடிக்கையான ஆடியோ, ஏஆர்

மேலும் அனைத்து வேடிக்கையான ஆடியோ, ஏஆர் விளைவுகள் போன்ற எடிட்டிங் கருவிகளை ரீல்ஸ் வழங்குகிறது. இனி வரும்மாதங்களில் இந்த தளத்தில் புதிய புதிய வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Instagram Reels New Update Allows Users To Make 30 Second Video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X