Home
News

Instagram இருக்கா? Reels போடுவீங்களா? இனிமே 3 நிமிடத்துக்கு வெச்சாங்க பாரு.. யூசர்களை கையில புடிக்க முடியாது!

இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ரீல்ஸ் போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஒட்டுமொத்த யூசர்களின் வயிற்றிலும் பாலை வார்த்தது போல புது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இனிமேல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) பதிவேற்றம் செய்யும்போது, இந்த மாற்றம் அப்பாடா என்று சொல்ல வைக்கும். அப்படி என்னதாங்க வந்திருக்கு என்று கேட்பது புரிகிறது, இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம், பேஸ்புக் (Facebook) ஓல்டு பேஷன் என்று சொல்லும்படி மாறிவிட்டது. 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் அதிகமாக பயன்படுத்தும் ஆப் எதுவென்று பார்த்தால், அது பேஸ்புக் என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். ஆனால், இப்போது, நிலைமையே வேறு இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற ஆப்களை தவிர்த்து வேறு எதையும் சொல்ல முடியாது.

Instagram இருக்கா? Reels போடுவீங்களா? இனிமே 3 நிமிடத்துக்கு வெச்சாங்க!

அந்த அளவுக்கு சோஷியல் மீடியா ஆப்களின் ஆதிக்கம் இருக்கிறது. அதிலும், இன்ஸ்டாகிராம் ஆப் இளசுகளின் ஆதர்சமான சோஷியல் மீடியா பக்கமாக மாறிவிட்டது. 2K கிட்ஸ் இந்த ஆப்கள் இல்லாமல் இருக்க மாட்டர்கள் என்றுகூட சொல்லிவிட முடியும். அந்த அளவுக்கு ரீல்ஸ் மற்றும் போஸ்ட்களை உங்களால் பார்க்க முடியும். எதை செய்தாலும் ஒரு ரீல்ஸ் அல்லது போஸ்ட் போட்டுவிடுவார்கள்.

இது வழக்கமாகவே மாறிவருவதையும் மறுக்க முடியாது. அதிலும், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் தங்களது ஃபாலோயர்களுக்கு ரீல்ஸ் அல்லது போஸ்ட் மூலம் ஏதாவது ஒரு அப்டேட் கொடுக்காமல் அன்றைய நாளை முடிக்க மாட்டர்கள். இப்படிப்பட்ட கிரியேட்டர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கும் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதில் ஒரு புது மாற்றம் கிடைத்து இருக்கிறது.

இதுவரையில் 90 செகண்ட்களுக்கு மட்டுமே ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும்படி லிமிட் இருந்தது. ஆனால், இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் லிமிட் (Instagram Reels Limit) இப்போது 3 நிமிடங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் பதிவு செய்து கொள்ளலாம். இது கூடுதல் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை அதிகரிக்க இருக்கிறது. ஏகப்பட்ட கிரியேட்டர்களுக்கு 90 செகண்ட் போதவில்லை.

இதனால், நல்ல கன்டென்ட்களை சுருக்க வேண்டி இருந்தது. அதேபோல பொழுதுபோக்கு ரீல்ஸ் எபெக்டிவ்வாக இருக்காமல் இருந்தது. இதை சரி செய்ய 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் பதிவிட அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஹெட் ஆடம் மொசெரி இந்த அப்டேட்டை கொடுத்து இருக்கிறார். ஷார்ட்-பார்ம் வீடியோ ஆப்களின் இன்ஸ்டாவுக்கு யூடியூப், டிக்டாக் போட்டியாக இருக்கிறது.

இந்தியாவில் டிக்டாக் இல்லையென்றாலும், யூடியூப் (YouTube) கடும்போட்டியாக இருக்கிறது. சொல்லப்போனால், யூடியூப்பில் 3 நிமிடங்களுக்கு ஷார்ட்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஆனால், இன்ஸ்டாகிராமில் 90 செகண்ட்களுக்கு மட்டுமே இருந்ததால், அதன் யூசர்களை யூடியூப் கவர்ந்தது. அதே நேரத்தில் இந்த லிமிட்டை அதிகரிக்க கிரியேட்டர்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்தது.

இப்போது, இன்ஸ்டாகிராம் ஹெட் ஆடம் மொசெரி லிமிட்டை இதை அதிகரித்து இருக்கிறார். இனிமேல் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு நிகராக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து கொள்ள முடியும். முன்னதாக யூடியூப் ஷார்ட்ஸ் பதிவேற்றம் செய்யும்போது 60 செகண்ட்களுக்கு மட்டுமே லிமிட் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கு 90 செகண்ட்களுக்கு கொடுக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், யூடியூப் 3 நிமிடங்களுக்கு பதிவேற்றம் செய்ய அனுமதி கொடுத்தது. இதனால், இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கும் இந்த 3 நிமிட ஃபார்மெட் பிடித்து போய்விட்டது. அதை புரிந்து கொண்ட மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமிலும் 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இதனால், யூசர்களை இனிமேல் கையில் பிடிக்க முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Instagram Reels Length Limit 2025 Users Can Post 3 Minutes Long Reels Previous 90 Second Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X