Instagram DM இல் இனி நிர்வாண படங்களுக்கு தடை.! மீறி செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?

|

Instagram பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கலே, முன்பின் தெரியாத நபர்கள், மிகவும் தெரிந்த நபர்களை போல பிரைவேட் மெசேஜ்களை அல்லி பெண்களின் DM பாக்சில் நிரப்பிவிடுவார்கள். பெரும்பாலானோர் , பெண்களிடம் பேச ஆர்வம் காட்டினாலும், ஒரு சிலர் இந்த DM அம்சத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பெண்களின் கணக்குகளுக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்புவது, நிர்வாண படங்களை அனுப்புவது என்று எல்லை மீறுகிறார்கள்.

இன்ஸ்டாவில் எல்லை மீறும் நாகரிகமற்ற ஆசாமிகள்

இன்ஸ்டாவில் எல்லை மீறும் நாகரிகமற்ற ஆசாமிகள்

இனி இப்படி எல்லை மீறும் நாகரிகமற்ற ஆசாமிகள் வாலை ஓட்ட நறுக்கும் விதமாக, இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த புதிய அம்சம் இனி இன்ஸ்டாகிராம் DM மெசேஜ்களின் யாரும் நிர்வாண புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பகிர அனுமதிக்காத படி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பெண் பயனர்களின் பாதுகாப்பு நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைரக்ட் மெசேஜ்களில் கோரப்படாத நிர்வாண புகைப்படங்களா?

டைரக்ட் மெசேஜ்களில் கோரப்படாத நிர்வாண புகைப்படங்களா?

இன்ஸ்டாகேம் டைரக்ட் மெசேஜ்களில் கோரப்படாத நிர்வாண புகைப்படங்களைப் பெறுவதிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் புதிய பயனர் பாதுகாப்பு அம்சமாக இந்த அம்சம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், மக்களிடையே உள்ள தொடர்பு இடைவெளியைக் குறைக்கிறது என்றாலும் கூட, அதே வேளையில், அது மக்களைத் டிஜிட்டல் முறையில் துன்புறுத்துவதும் இப்போது அதிகமாகியுள்ளது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

சைபர் பிளாஷிங் என்பது எவ்வளவு பெரிய சைபர் குற்றம் தெரியுமா?

சைபர் பிளாஷிங் என்பது எவ்வளவு பெரிய சைபர் குற்றம் தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கும் ஒரு குற்றமாக சைபர் ஃப்ளாஷிங் கூறப்படுகிறது. சைபர் பிளாஷிங் என்றால், ஆபாசமான போட்டோ அல்லது வீடியோ மூலம் பெண்களை அவமதிப்பதாகும். இது போன்ற தேவையற்ற நிர்வாண புகைப்படங்களை ஆட்டோமேட்டிக் ஆக பில்டர் செய்யக் கூடிய ஒரு புதிய அம்சத்தைத் தான் Instagram உருவாக்கி வருகிறது. இது ஆபாசமான உள்ளடக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

புது Nudity Protection அம்சம் இன்ஸ்டாவில் அறிமுகமா?

புது Nudity Protection அம்சம் இன்ஸ்டாவில் அறிமுகமா?

வெர்ஜ் வெளியிட்ட தகவலின் படி, இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்று மெட்டா உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்திற்கு நிறுவனம் "Nudity Protection" அம்சம் என்று பெயரிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய "Hidden Words" அம்சத்தைப் போன்றது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கொண்ட DM கோரிக்கைகளை தானாகவே பில்டர் செய்ய இந்த அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களுக்கு தடை.!

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களுக்கு தடை.!

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க மெட்டா மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்தப் போவதாகக் கூறப்படுகிறது. "இந்தப் புதிய அம்சம் மூலம் மக்களின் தனியுரிமை பாதுகாப்பை உறுதிசெய்ய நிபுணர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மெட்டா கூறியுள்ளது. அதே நேரத்தில் பயனர்கள் பெறும் மெசேஜ்களின் மீது அவர்களுக்குக் கட்டுப்பாட்டை வழங்கும், என்று மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த அம்சம் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்?

இந்த அம்சம் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்?

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் டெவலப்பரான அலெஸாண்ட்ரோ பௌஸியும் ட்விட்டரில் புதிய அம்சத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை ஸ்கிரீன் ஷாட் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் சாட்களில் நிர்வாணப் படங்கள் இருந்தால், அதை Instagram மறைத்துவிடும். இனி அது போன்ற புகைப்படங்களை அணுக முடியாது. பயனர்கள் பெறப்பட்ட புகைப்படம் அல்லது பிற மீடியாவை விரும்பி கிளிக் செய்தால் மட்டுமே அவை ஓபன் செய்யப்படும். இந்த அம்சத்தை On மற்றும் Off செய்ய பயனர்களுக்கு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இனி YouTube வீடியோக்களை யூடியூப் தளத்திலேயே டவுன்லோட் செய்யலாமா? புது வசதி சூப்பர்.!இனி YouTube வீடியோக்களை யூடியூப் தளத்திலேயே டவுன்லோட் செய்யலாமா? புது வசதி சூப்பர்.!

உலகளவில் எவ்வளவு பெண்கள் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர்?

உலகளவில் எவ்வளவு பெண்கள் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர்?

கடந்த இரண்டு ஆண்டுகளில், சமூக ஊடக தளங்களில் இணைய வழி கொடுமைப்படுத்துதல் வழக்குகள் அதிகரித்துள்ளன. எல்லா பயன்பாடுகளிலும், இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. 2017 இல் YouGov கருத்துக் கணிப்பின்படி, 40 சதவீதத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் ஆணின் அந்தரங்க உறுப்புகளின் கோரப்படாத புகைப்படங்கள் அல்லது நிர்வாண கிராஃபிக் புகைப்படங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண படங்களை மீறி அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?

நிர்வாண படங்களை மீறி அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் இப்போது உருவாகிவரும் பாதுகாப்பு அம்சம் ஆரம்ப சோதனையில் இருக்கிறது. இந்த அம்சம் எப்போது பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. நமக்கு தெரிந்த தகவலின் படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த அம்சம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. DM மெசேஜ் மூலம் ஆபாசப் படங்களை அனுப்புவோரின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம் செய்யப்படும். பெண்கள் புகார் அளித்தால், சைபர் ஃப்ளாஷிங் குற்றத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Instagram Is Bringing New Nude Protection Feature To Protect Girls From Unwanted Adult Images In DM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X