Home
News

இன்ஸ்டாக்ராமிற்கு வரும் புது அம்சம்.. இனி உங்க பிரெண்ட்ஸ் குரூப்பை டேக் செய்ய இதான் ஒரே வழி..

இன்றைய காலகட்டத்தில், மக்கள் அதிகமாக நேரம் செலவழிக்கும் ஒரு முக்கியமான சமூகவலைத்தள தளமாக இன்ஸ்டாகிராம் (Instagram) திகழ்கிறது. இன்ஸ்டாகிராம் ஆப்ஸை இப்போது உலகம் முழுக்க பல பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொழுதுபோக்கு, மார்க்கெட்டிங், சேல்ஸ், விழிப்புணர்வு, செய்திகள் என்று எல்லா வகையான பதிவுகளையும் நம்மால் இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது இன்ஸ்டாக்ராமை பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல விதமான அம்சங்களை நிறுவனம் வழங்கிவருகிறது. இதில் மிகவும் பிரபலமான 2 அம்ஸங்கள் என்றால் அது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோரீஸ் (Instagram Stories) மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) ஆகும்.

இன்ஸ்டாக்ராமிற்கு வரும் புது அம்சம்.. இனி டேக் செய்ய இதான் ஒரே வழி..

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அம்சத்தை மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இது அப்படியே வாட்ஸ்அப் ஸ்டோரீஸ் (WhatsApp Stories) போன்றது. ஆனால், இதில் கூடுதல் எடிட்டிங் விருப்பங்கள் (Editing feature) மற்றும் பில்டர் (Filter) விருப்பங்கள் பயன்படுத்த கிடைக்கின்றன. ஒரு-இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரம் வரை மட்டுமே செயல்பாட்டியில் இருக்கும். பிறகு அவை ஸ்டோரி பதிவில் இருந்து நீக்கப்பட்டுவிடும். இன்ஸ்டாகிராம் நிறுவனம் இப்போது இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் பதிவிடும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பலரைக் டேக் (Tag) செய்யும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் விரைவில் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒருவர் பின் ஒருவராக டேக் செய்யும் அம்சத்தை போல, இனி எளிமையாக மல்டிபிள் நபர்களை (Multiple member tagging) ஒரே நேரத்தில் டேக் செய்ய அனுமதிக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் கொண்டுவரப்போகிறதாம். நீங்கள் இப்போதும் கூட உங்கள் ஸ்டோரியில் பலரைக் டேக் செய்ய முடியும்.

ஆனால், அவ்வாறு செய்வது அதிக இடத்தைப் பிடிக்கும் மற்றும் நேரத்தை எடுக்கும். இன்ஸ்டாகிராம் இப்போது ஃபாண்ட் சைஸ்களை (Font size) மாற்றவும், குறைக்கவும் அனுமதிக்கிறது. ஆனால் குரூப் டேக் வார்த்தைகளை (Instagram Group Tag Mention) சேர்ப்பு போன்ற அம்சத்தை இதுவரை இன்ஸ்டாகிராம் கொண்டிருக்கவில்லை. இப்போது நிறுவனம், இதற்கான புதிய அம்சத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி, இந்த புதிய அம்சம் பற்றி ஐஜி அப்டேட்ஸ் சேனலில் அறிவித்தார். இது தற்போது ஒரு சோதனையில் உள்ளதென்றும், அனைவருக்கும் இது விரைவில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புதிய அம்சத்தின் மூலம், இன்ஸ்டாகிராம் ஒரு ஸ்டோரியில் ஒரு நபர் குழுவை, ஒரே குறிப்புடன் (single mention) குறிக்க உங்களை அனுமதிக்கும். எனவே உங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் (Instagram Story) நீங்கள் குறிப்பிட விரும்பும் ஐந்து பேரையும் தனித்தனியாக குறியிட வேண்டியதில்லை.

இன்ஸ்டாக்ராமிற்கு வரும் புது அம்சம்.. இனி டேக் செய்ய இதான் ஒரே வழி..

நீங்கள் செய்ய வேண்டியது ஒரு குரூப் மென்க்ஷனை (Instagram group mention) உருவாக்கி, அதில் நபர்களைச் சேர்க்க வேண்டும். எனவே இப்போது நீங்கள் தனித்தனியாக அனைவரையும் குறியிடுவதற்குப் பதிலாக, சிங்கள் டச்சில் குரூப் மென்க்ஷனை சேர்த்தால், அந்த குரூப் இன் கீழ் நீங்கள் சேவ் செய்து வைத்த அனைவரின் பெயரும் டேக் செய்யப்படும்.

இதன் மூலம் குரூப் மெங்ஷனில் குறியிடப்பட்ட அனைவரும் அதை தங்கள் ஸ்டோரிக்கு மீண்டும் எளிதாக பயன்படுத்த முடியும். நீங்கள் ஒரு பெரிய குழுவுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை இடுகையிட திட்டமிட்டால், குரூப் மென்ஷன் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாக திகழும். இந்த அம்சம் எப்போது அல்லது பின்னர் அனைவருக்கும் வெளிவரும் என்பதை மொசெரி வெளியிடவில்லை.

ஆனால் சோதனையில் உள்ள பெரும்பாலான இன்ஸ்டாகிராம் அம்சங்களுடன், இது நிலையான பதிப்பை உருவாக்குகிறது, இதுவும் விரைவில் வெளிவரும். Instagram தனது செயலியில் பல்வேறு தயாரிப்புகளுக்கான புதிய அம்சங்களைச் சேர்ப்பதில் சமீபத்தில் பிஸியாக உள்ளது. பல எடிட்டிங் கருவிகளுக்கான (Instagram editing tools) விரைவான அணுகல் மூலம் இப்போது ரீல்களை உருவாக்குவதை நிறுவனம் எளிதாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Instagram group tag in stories feature coming soon with next update 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X