இன்ஸ்டா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : இனி டிவியில் ரீல்ஸ் பார்க்கலாம்.!
இன்ஸ்டாகிராம் செயலியை நேரடியாக ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள உதவும் உலகப் புகழ்பெற்ற சமூக வலைத்தளமாகும். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியைக் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பொழுதுபோக்கு மற்றும் தகவல் பகிர்வுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம், பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் இந்த இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களுக்குத் தனிப்பட்ட குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். பயனர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், மெட்டா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவிகளுக்காக 'Instagram for TV' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பெரிய திரையில் பார்த்து ரசிப்பதுடன், அவற்றைப் பகிரவும் முடியும். இதைப் பயன்படுத்த டிவியின் ஆப் ஸ்டோரில் சென்று 'Instagram' என தேடி செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவினால் போதும்.
டிவியில் செயலியைத் திறந்தவுடன் திரையில் தோன்றும் QR குறியீட்டை மொபைல் மூலம் ஸ்கேன் செய்து எளிதாக உள்நுழையலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கை டிவியுடன் இணைத்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பெரிய திரையில் ரசிக்க முடியும்.
இந்த புதிய வசதி முதற்கட்டமாக 2020ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளடக்கங்களைப் பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தை வழங்கும் இந்த அம்சம், பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃபரில் சாம்சங் டிவி
மேலும் பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung Crystal 4K Vista 43 inch Ultra HD Smart Tizen TV) மாடலுக்கு இப்போது 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.

பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட், க 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K), மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), கியூ-சிம்பொனி (Q-Symphony) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாம்சங் 43 இன்ச் டிவியில் உள்ளன.
ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட், ஐஓடி-சென்சார் ( IoT-Sensor) உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.


Click it and Unblock the Notifications