சோலி முடிந்தது.. முற்றிலும் தடை செய்யப்பட்ட Pornhub- அடுத்து என்ன?

|

PornHub இன்ஸ்டாகிராம் கணக்குக்கு 13.1 மில்லியன் ஃபாலோவர்கள் இருந்தனர். இந்த கணக்கில் மொத்தம் 6,200 க்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்தது.

இந்த நிலையில் PornHub இன்ஸ்டா கணக்கு அறிவிப்பின்றி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவின் கொள்கைக்கு இணங்க பதிவுகள் பதிவிடப்பட்டு வந்தாலும் PornHub கணக்கு தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு தடை

அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு தடை

PornHub இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கை Instagram நீக்கியுள்ளது. கணக்கு ஏன் நீக்கப்பட்டது என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டா வெளியிடவில்லை.

இருப்பினும் காரணம் இதுவாக இருக்கலாம் என சில தகவல் வெளியாகியுள்ளது.

கொள்கைகள் மீறும் கணக்குகள் மீது நடவடிக்கை

கொள்கைகள் மீறும் கணக்குகள் மீது நடவடிக்கை

சமூகவலைதளங்களில் பிரபல புகைப்பட பகிர்வு தளமாக Instagram இருக்கிறது. இன்ஸ்டாவில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் மிகவும் புகழ்பெற்றது.

ஒவ்வொரு சமூகவலைதளங்களும் தங்களுக்கு சில கொள்கைகளை வைத்திருக்கிறது. கொள்கைகளை மீறும் கணக்குகள் மீது உடனடி நடவடிக்கையை நிறுவனங்கள் எடுத்து வருகிறது.

அதன்படி தற்போது இன்ஸ்டாவில் 13.1 மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட கணக்கு ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்ட PornHub

முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்ட PornHub

PornHub இன் அதிகாரப்பூர்வ கணக்கை இன்ஸ்டாகிராம் அகற்றி உள்ளது. 18+ கண்டென்ட்களை இன்ஸ்டாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு PornHub தொடர்ச்சியாக பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த கணக்கு முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்டுள்ளது. PornHub தடை செய்யப்பட்டது குறித்து வெரைட்டி தளத்தில் முதலில் தகவல் வெளியானது.

தடைக்கான காரணம் என்ன?

தடைக்கான காரணம் என்ன?

PornHub தடை செய்யபட்டதற்கான காரணத்தை இன்ஸ்டா அறிவிக்கவில்லை. சிவில் உரிமை குழுக்களின் அழுத்தத்திற்கு இணங்க PornHub கணக்கு நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இன்ஸ்டாகிராம் இந்த தடைக்கான காரணத்தை ஏன் தற்போது வரை வெளியிடவில்லை என தெரியவில்லை.

அதிக ஃபாலோவர்கள் கொண்ட இன்ஸ்டா கணக்கு

அதிக ஃபாலோவர்கள் கொண்ட இன்ஸ்டா கணக்கு

PornHub இன் இன்ஸ்டாகிராம் கணக்கில் சுமார் 13.1 மில்லியன் ஃபாலோவர்கள் இருந்தனர். 6200 க்கும் மேற்பட்ட பதிவுகள் இதில் இருந்தது.

Instagram இன் வழிகாட்டுதல்களை மீறி PornHub பதிவுகளை பதிவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் பதிவிடப்படும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் நேரடியாக ஆபசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதாவது சூசகமான ஆபாச பதிவுகளை PornHub பதிவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Anti-PornHub பிரச்சாரகர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

Anti-PornHub பிரச்சாரகர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

PornHub கணக்கு நீக்கப்பட்டதற்கு பிறகு, Anti-PornHub பிரச்சாரகர் ஆன Laila Mickelwait ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டார். அதில் இன்ஸ்டாகிராமின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக PornHub கணக்கு தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுத்து வரும் கோரிக்கைகள்

PornHub கணக்கு நீக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக இன்ஸ்டாகிராம் வெளியிடவில்லை என்றாலும் சிவில் உரிமை குழுக்களின் அழுத்தம் காரணமாக தடை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Pornhub தாய் நிறுவனமாக MindGeek இருக்கிறது. சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் கிளைப் பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் சுதந்திரமாக செயல்படும் PornHub

ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் சுதந்திரமாக செயல்படும் PornHub

PornHub இன்ஸ்டாகிராம் கணக்குக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் PornHub ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

PornHub ட்விட்டர் கணக்கில் 3.4 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். அதேபோல் PornHub இன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 882,000 சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவில் துரிதமான நடவடிக்கை

இந்தியாவில் துரிதமான நடவடிக்கை

மறுபுறம் இந்தியாவில் ஆபாச தளங்களுக்கு எதிராக துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் என்.சி.எம்.இ.சி என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

இது குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்கு என தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பாகும்.

ஆபாச தளங்களுக்கு எதிரான நடவடிக்கை

ஆபாச தளங்களுக்கு எதிரான நடவடிக்கை

2019 ஆம் ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி இந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பெரிதும் அதிர்ச்சயளிக்கும் வகையில் இருந்தது.

அதாவது ஐந்து மாதங்களில் மட்டும் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலா வருவதாக தெரிவித்தது.

தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகளில் ஆபாச தளங்களுக்கு எதிரான நடவடிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Instagram Banned Famous Adult Content Website Account: Here the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X