ஆன்ட்ராய்டு சாதனங்களில் பிலிப்போர்டு நியூஸ் ரீடர்!

By Karthikeyan
|
ஆன்ட்ராய்டு சாதனங்களில் பிலிப்போர்டு நியூஸ் ரீடர்!

ஆன்ட்ராய்டு சாதனங்களை வைத்திருப்போர் ஏராளமான வசதிகளையும் புதிய புதிய அப்ளிகேசன்களையும் அனுபவத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிலிப்போர்ட் என்ற உலகின் மிகவும் பிரபலமான நியூஸ் ரீடர் அப்ளிகேசன், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு வர இருக்கிறது. அதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் பிலிப்போர்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதோடு இந்த பிலிப்போர்டு நியூஸ் ரீடர் அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு சாதனங்கள் மட்டுமல்லாது அமேசான் கின்டில் பயர், பேர்னஸ் மற்றும் நோபில் நோக் ஸ்லேட் ஆகிய சாதனங்களுக்கும் வர இருக்கிறது என்று பிலிப்போர்டு அறிவித்திருக்கிறது.

மேலும் அதன் தொடர்ச்சியான் பிலிப்போர்டின் ஆன்ட்ராய்டு வெர்சன் சாம்சங் கேலக்ஸி எஸ்3 போனில் ப்ரிஇன்ஸ்டால் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது பிலிப்போர்ட்.

மேலும் பிலிப்போர்ட் நியூஸ் ரீடர் சேவையை விரிவுபடுத்த கூகுள்+ மற்றும் யுடியூப் ஆகியவற்றுடனும் பிலிப்போர்ட் இணைந்திருக்கிறது. எனவே இப்போது கூகுள்+ல் உறுப்பினராக இருப்போர் மிக எளிதாக பிலிப்போர்டுடன் தம்மை இணைத்து கொண்டு செய்திகள் வாசிக்கலாம்.

அதுபோல் யுடியூப்பிலும் செய்திகள் வீடியோ வடிவத்தில் இருக்கும். எனவே பிலிப்போர்டின் நீயூஸ் ரீடரை எளிதில் வாசிக்கலாம்.

அதோடு இப்போது பிலிப்போர்டின் நீயூஸ் ரீடர் ஜெர்மனி, இத்தாலி, கொரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் அந்தந்த நாடுகளுக்கான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. விரைவில் தமிழில் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. விரைவில் வர வாழ்த்துவோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X