மூன்றாவது முறையாக செவ்வாய் கிரத்தில் பறந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர்.! நாசா முக்கியத் தகவல்.!
கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். மேலும் நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த வாரங்களில் இருமுறை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் சிறிய ஹெலிகாப்டர் 39.1 வினாடிகளுக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பியதாக நாசா அறிவித்துள்ளது.

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

அதேபோல் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் ஆனது துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தவல்களை நாசா அமைப்பிற்கு அனுப்பி வருகிறது. மேலும் 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஆனது தற்சமயம் செவ்வாய் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்ற MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளது நாசா அமைப்பு.

அதாவது இந்த கருவி ஆனது காரபன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரிந்து ஆக்சிஜனை உருவாக்கும் அருமையான திறன் கொண்டது. நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இந்த முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை கருவி உற்பத்தி செய்துள்ளது என்றும், இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாசிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த MOXIE என பெயரிடப்பட்ட கருவியை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும். பின்பு ரோவார் பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications