25,000 பணியிடங்கள் ஓபன்: ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை- இன்ஃபோசிஸ் அதிரடி அறிவிப்பு!

|

முன்னணி ஐடி துறைகளில் பிரதானமாக இருப்பது இன்ஃபோசிஸ் நிறுவனம். இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. தொற்றுநோய் பரவலானது இந்த காலாண்டிலும் தொடர்ந்து வருவதாகவும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்கள் அணுகுமுறையின் மூலம் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சலீல் பரேக் தெரிவித்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

ஜனவரி 2021 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கான அடுத்த சம்பள உயர்வை அறிவித்தது. இதை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் நிதியாண்டின் இறுதி காலாண்டின் அறிவிப்புகளில் குறிப்பிட்டார். அதேபோல் குவாண்டம் தொழில் விதிமுறைகளின்படி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான பகுதிகளை இலக்காக கொண்டிருப்பதாக நிறுவனத்தின் சிஓஓ பிரவீன் ராவின் தெரிவித்தார்.

இன்ஃபோசிஸ் பணியிடங்கள்

இன்ஃபோசிஸ் பணியிடங்கள்

ஊழியர்கள் குறித்த காலாண்டு அறிக்கையின்படி இந்த காலாண்டில எண்ணிக்கை 15.2% ஆக இருந்தது. இந்த நிறுவனம் 10,307 ஊழியர்களை சேர்த்தது. இது மூன்றாம் காலாண்டில் 10.3% ஆக இருந்தது. அதேபோல் கடந்த மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்தம் 2,59,619 ஊழியர்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் பணியிடங்களில் 38.6% பெண்கள் ஆவர். அதேபோல் மொத்தமாக கடந்தாண்டில் 21,000 புதிய ஊழியர்களை நிறுவனம் பணியமர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் இந்த எண்ணிக்கையில் 19,000 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆகும். மொத்தமாக இன்போசிஸ் நிறுவனம் கடந்தாண்டு சுமார் 36,000 ஊழியர்களை பணியமர்த்தியாக தெரிவித்துள்ளது.

காலாண்டு லாபம்

2021 மார்ச் காலாண்டின் ஒட்டு மொத்த லாபம் ரூ.5,076 கோடியை ஈட்டியது. இந்த லாபமானது நிபுணர்கள் கணிப்பைவிட குறைவாகவே கூறப்படுகிறது. அதேபோல் கடந்த காலாண்டைவிட 2.3% சதவீத லாபம் குறைவாக இருக்கிறது. செயல்பாட்டு வாயிலாக 2021 மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.26,311 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. இந்த வருவாய் டிசம்பர் 2020 காலாண்டைவிட 1.5% அதிகமாக இருக்கிறது.

25,000 புதியவர்களை பணியமர்த்த திட்டம்

மேலும் நிதியாண்டு 22-ல் இன்ஃபோசிஸ் நிறுவனம் 25,000 புதியவர்களை பணியமர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது நிதியாண்டில் சாதாரண வளர்ச்சியை விட 15% என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவை சூழல் வலுவாக உள்ளது எனவும் இந்தியாவில் நாங்கள் ஏராளமான கல்லூரி பட்டதாரிகளை கொண்டிருப்பதாகவும், இதனால் ஆட்கள் சேர்ப்பை மேற்கொள்ள முடியும் எனவும் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவை தங்களுக்கு உள்ளது எனவும் நம்புவதாகவும், நம்பிக்கையான பார்வை எனவும் சலீல் பரேக் தெரிவித்தார்.

சம்பள உயர்வு அறிவித்த நிறுவனம்

கடந்தாண்டு சம்பள உயர்வு எதுவும் வழங்காத நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தாண்டு ஜனவரியில் முதல் சுற்று சம்பள உயர்வை வெளியிட்டது. இந்த உயர்வானது தொழில்முறை தரங்களுக்கு ஏற்ப இருக்கும் எனவும் அதிக மனப்பான்மையை காணும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டு வளாகத்துக்குள் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த உத்தேசித்துள்ளதாகவும் அதில் 24,000 பேர் இந்தியாவில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆயிரம் பேர் வெளியில் இருந்து வரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infosys Plans to Hire 25,000 Freshers in FY22

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X