காக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்?

|

ஐடி-நிறுவனங்கள் பற்றி தொடர்ந்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனமான சிடிஸ் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தி வெளியானதை தொடர்ந்து,உடனே இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தான் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

செய்தி வெளியானது

செய்தி வெளியானது

இந்தநிலையில்,ஐடி துறையில் ஆயரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்செய்திகள்வெளியாகியுள்ளன. அதிலும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஐடி
நிறுவனமான காக்னிசண்ட் (cts), சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும், 7000ஊழியர்களை பணியில் இருந்து நீக்கத் திட்டமிட்ருப்பதாகவும் அன்மையில் செய்தி வெளியானது.

டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.!டிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.!

காக்னிசண்ட் நிறுவனம்

காக்னிசண்ட் நிறுவனம்

குறிப்பாக காக்னிசண்ட் நிறுவனம் தனது உள்ளடக்க நிர்வாகப் பிரிவில் இருந்து வெளியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாகவும் பணியிழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் பேஸ்புக் போன்ற வாடிக்கையாளர்களுக்காக சிடிஎஸ் சமூக உள்ளடக்கத்தை கண்காணித்து நிர்வகிக்கும் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இந்த காக்னிசண்ட் நிறுவனத்தின் ஆட்குறைப்பு திட்டம் ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்திய நிலையில் உலகின் மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை
பணியில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

அதாவது இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆறாம் அடுக்கு ஊழியர்களில், பத்து சதவீத ஊழியர்களை நீக்கத்
திட்டமிட்டிருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு நிலையிலும், ஆட்குறைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்விரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்

4000 அல்லது 10000வரை

4000 அல்லது 10000வரை

எனினும் இந்த நடவடிக்கை காரணமாக 4000 அல்லது 10000வரை ஊழியர்கள் வேலை இழக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது

தகுதி மற்றும் எதிர்பார்த்த அளவு பணியாற்றாத ஊழியர்கள்

தகுதி மற்றும் எதிர்பார்த்த அளவு பணியாற்றாத ஊழியர்கள்

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனத்தில், செயல்திறன்மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன செயல்திறனை
மேம்படுத்துவதற்காக, தகுதி மற்றும் எதிர்பார்த்த அளவு பணியாற்றாத ஊழியர்கள் நீக்கப்படும் வழக்கமானநடவடிக்கை இது என்றும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

இந்நிலையில் பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினி, 500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக செய்திவெளியாகியுள்ளது. எனினும் இந்த ஊழியர்களுக்கு 90நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் அவர்கள்
தங்களுக்கான திட்டங்களை தேடிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் வேலையிழக்க நேரம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Best Mobiles in India

English summary
Infosys IT Company Planning to Remove 10000 Employees: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X