கதை முடிஞ்சது.. Infosys ஊழியர்களுக்கு கடும் உத்தரவு.. WFH செய்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் புதிய பாலிசி!
வேறு வழி இல்லாமல் கொண்டுவரப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) யோசனையை ஓரளவு தான் பயன்படுத்த வேண்டும், ஓவர் ஆக பயன்படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்று சொல்லாமல் சொல்லும்படியாக இன்ஃபோசிஸ் (Infosys ) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு கடுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூழ்நிலைகள் சரியான பின்னரும் கூட, கோவிட்-19 தொற்றுநோய் (Covid-19 Pandemic) காலக்கட்டத்தில் அறிமுகமான வொர்க் ஃப்ரம் ஹோம் 'கான்செப்ட்' ஆனது, பெரும்பாலான ஊழியர்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்துக்கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் கதையை முடித்துக்கட்ட விரும்புகின்றன.

கூகுள் (Google) உட்பட உலகம் முழுவதும் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வொர்க் ஃப்ரம் ஹோம் கொள்கையை (WFH Policy) முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளன. இந்த பட்டியலில் சமீபத்திய நுழைவாக, இந்திய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் சேர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனமானது குறிப்பிட்ட சில பணியாளர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான கடுமையான உத்தரவை (Strict mandate) வெளியிட்டுள்ளது. டிஓஐ-யின் சமீபத்திய அறிக்கையின்படி, இன்ஃபோசிஸ் நிறுவனமானது, அமெரிக்காவிலும் கனடாவிலும் ( United States and Canada) உள்ள தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து தங்களது பணியை தொடரும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் ஊழியர்கள் சிறப்பு அனுமதியை (Special permission) பெற வேண்டும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு சேர்த்து, ரிமோட் வொர்க் (Remote Work) தொடர்பான நிறுவனத்தின் புதிய வொர்க் பாலிசியை (New Work Policy) யாராவது கடைப்பிடிக்கத் தவறினால், சாத்தியமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் இன்ஃபோசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட இன்ஃபோசிஸ் பணியாளர்களுக்கான மட்டுமே பொருந்தும். அதாவது "பணியாளர்களை அலுவலகத்திற்கு திரும்ப வைக்கும்" இந்த புதிய வொர்க் பாலிசி ஆனது இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்களுக்கு (Infosys offices in India) பொருந்தாது என்று அர்த்தம்.
இருப்பினும் இந்தியாவில், வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு கொண்டுவரும் மூன்று கட்ட திட்டத்தை (Three-stage plan) கடந்த ஆண்டே இன்ஃபோசிஸ் அறிமுகப்படுத்தி விட்டது. முதற்கட்டமாக ஊழியர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாரத்திற்கு இருமுறை அலுவலகத்திற்கு வர (2 Days Office in a Week) அனுமதிக்கப்படுவர்.
இரண்டாவது கட்டமானது, பணியாளர்களுக்கு வேறு கிளை அலுவலகத்திற்கு இடம் மாறுதல் (Relocate) அல்லது இடமாற்றம் கோருவதற்கான (Transfer Request) விருப்பத்தை வழங்கும். இறுதியாக, இன்ஃபோசிஸ் நிறுவனமானது முந்தைய 2 கட்டங்களின் வழியாக கிடைத்த ஃபீட்பேக் (Feedback) அடிப்படையில் ஒரு ஹைபிரிட் வொர்க் கொள்கையை (Hybrid Work Policy) உருவாக்கும்.
கடந்த பிப்ரவரியில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் ஆன நாராயண மூர்த்தி (Narayana Murthy), இளைஞர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை வலியுறுத்தக் கூடாது" என்று அறிவுரை கூறியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் "தயவுசெய்து இந்த வலையில் விழ வேண்டாம்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications