இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு: புது வேலை மாதிரி திட்டத்தை அறிவித்த ஐடி நிறுவனம்!
கொரோனா தாக்கம் நாடுமுழவதும் அச்சத்தை ஏற்படுத்தியது இதன் தாக்கத்தை குறைக்கும் தடுப்பூசி அனைவருக்கும் எப்போது முழுமையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. குறிப்பாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளாவிய அளவில் பணிநீக்க நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

ஊழியர்கள் பணி நீக்கநடவடிக்கை
சில நிறுவனங்களில் சம்பளத்தில் பிடிப்புகளும் செய்யப்படுகிறது. இன்னும் ஏணைய நிறுவனங்களில் தங்களது ஊழியர்களை 40 நாட்கள் வரை பெஞ் செய்யப்படுகிறார்கள். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் சில டிஜிட்டல் துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களைச் சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது.

வொர்க் ப்ரம் ஹோம் அறிவிப்பு
சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் அறிவித்தது. மார்ச் மாதம், கொரோனா தொற்று காரணமாக, வீட்டிலிருந்து பணி புரிவதை எளிதாக்க, யோசப்-களுக்கான சில விதிமுறைகளை DoT தளர்த்தியது. வீட்டில் இருந்து பணிபுரியும் கால அளவை DoT அறிவித்தது.

IT மற்றும் BPO நிறுவனங்கள்
அரசு புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி. IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31ம் தேதி வரை அதிகரித்து அறிவிக்கப்பட்டது.

சூழ்நிலையை கருத்தில் கொண்டே நடவடிக்கை
ஐடி ஊழியர்கள் பலரும் தங்களது பணிகளை வீட்டில் இருந்தே மேற்கொண்டு வருகின்றனர். பின்வரும் நாட்களில் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே ஊழியர்கள் அலுவலகத்தில் வந்திருந்து பணி புரிவார்களா அல்லது வீட்டில் இருந்தே தொடர்ந்து பணி புரிவார்களா என முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஹைபிரிட் வேலை மாதிரி (Hyprid work Model) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஹைப்ரிட் வேலை மாதிரி திட்டம்
ஹைப்ரிட் வேலை மாதிரி என்பது சூழ்நிலைக்கேற்ப ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து பணி புரிய அனுமதிப்பதாகும். இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் இதுகுறித்து கூறுகையில், தங்களது நிறுவனம் ஃப்ளெக்சிபிள்(பொருத்தமான) ஹைப்ரிட் வேலை மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் சூழ்நிலைக்கேற்ப செயல்பட இது வகைவகுக்கும் எனவும் அவர் கூறினார்.

சரியான அணுகுமுறை இல்லை
மேலும் கொரோனோ பாதிப்பை கருத்தில் கொண்டுள்ளோம் வெவ்வேறு நேரங்களில் சூழ்நிலைக்கேற்ப ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற இந்தமுறை அனுமதிக்கும் எனவும் அதேபோல் சரியான அணுகுமுறை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications