5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இன்போகஸ் டர்போ 5 வெளியானது.!

By: Meganathan S

இன்போகஸ் நிறுவனத்தின் புதிய டர்போ 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் டர்போ 5 ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் மற்ற ஸ்மார்ட்போன்களை விட அதிகமாக இருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இன்போகஸ் டர்போ 5 வெளியானது.!

இந்தியாவில் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படடும் இன்போகஸ் டர்போ 5 இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 ஜிபி ரேம் ரூ.6,999 மற்றும் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் இன்போகஸ் டர்போ 5 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அட்டகாசமான வடிவமமைப்பு

அட்டகாசமான வடிவமமைப்பு

இன்போகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போனில் அட்டகாசமான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளதால் மெலிதாகவும் எடை குறைவாகவும் இருக்கிறது. இத்துடன் அதிவேகமாக இயங்கும் கைரேகை ஸ்கேனர், பிளாஷ்லைட் மற்றும் செல்பி எடுக்கவும் பயன்படுகிறது. 5.2 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே எச்டி 720 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 2.5 டி வளைந்த கிளாஸ் பேனல் வழங்கப்பட்டுள்ளது.

வன்பொருள் அம்சங்கள்

வன்பொருள் அம்சங்கள்

இன்போகஸ் ஸ்மார்ட்போனில் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

13 எம்பி பிரைமரி ரேமா, F/2.2 அப்ரேச்சர், எச்டிஆர் மோட், பானரோமா மோட், பில்ட்டர் மற்றும் பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது. செல்பிக்களை எடுக்க 5 எம்பி கேமரா மற்றும் பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இன்போகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 34 நாட்கள் ஸ்டான்ட் பை டைம், 50 மணி நேர பயன்பாடு, 15 மணி நேர ஆன்லைன் வீடியோ பார்க்கவும் 23 மணி நேர வீடியோ காலிங் திறன் கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
InFocus Turbo 5 with a massive 5000mAh battery has been launched today and is exclusive to Amazon.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot