180W தண்டர் சார்ஜிங் உடன் வெளிவரும் Infinix Zero Ultra.. இதுக்கு வெயிட் பண்ணலாமா?
Infinix நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் புதிதாக இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra) என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ சீரிஸ் போனின் அறிமுகம் இன்னும் பிராண்டால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அதற்கு முன்னதாக இந்த போன் டிவைஸின் முக்கிய விபரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டிவைஸ் 180W தண்டர் சார்ஜிங் உடன் வருகிறது.

Infinix Zero Ultra ஸ்மார்ட்போன்
இந்த Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. காரணம், இந்த டிவைஸ் குறிப்பிட்டுக் கூறும் வகையிலான சிறந்த அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது. இந்த புதிய Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ராவின் முக்கியமான ஸ்பெக்ஸ் ஆக 180W தண்டர் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வர வாய்ப்புள்ளது. இந்த டிவைஸ் 4,500mAh பேட்டரி உடன் வருகிறது.

Infinix Zero Ultra ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
இந்த 180W தண்டர் சார்ஜிங் அம்சம் Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் 4 நிமிடங்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் அம்சத்தைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. பிரபல டிப்ஸ்டர் Paras Guglani (@passionategeekz), Techyorker உடன் இணைந்து வெளியிட்ட தகவலின் படி, இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த டிவைஸ் இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Infinix Zero Ultra விலை என்னவாக இருக்கும்?
விரைவில் இந்தியாவிற்குள் களமிறங்க உள்ள Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் 4ஜி இணைப்பு அம்சத்துடன், 8ஜிபி ரேம் மற்றும் அதிகபட்சமாக 256ஜிபி ஸ்டோரேஜ்ஜை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் லீக் ஆனா தகவலின் படி, வரவிருக்கும் Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் டிவைஸ் இந்தியாவில் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Infinix படி, 180W தண்டர் சார்ஜில் ஃபியூரியஸ் மோட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோடு என்று இரண்டு தனித்தனி சார்ஜிங் மோட்கள் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போது விற்பனைக்கு கிடைக்கும் Infinix Zero 5G டிவைஸ்
இந்த புதிய டிவைஸில் இருக்கும் ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஃபியூரியஸ் சார்ஜிங் மோட் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ஜிங் மோட் அம்சத்தை இயக்க முடியும். இந்த 180W மோட் 8C என்ற விகிதத்தில் பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது. இது பேட்டரி அதிக வெப்பமடைவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், Infinix Zero 5G டிவைஸ் பிராண்டின் முதல் 5G ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை வெறும் ரூ. 19,999 என்று அறிமுகம் செய்யப்பட்டது.

Infinix Zero 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
இது 6.78' இன்ச் கொண்ட முழு HD+ IPS LTPS உடன் 1,080 x 2,460 பிக்சல்கள் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த டிவைஸ் MediaTek Dimensity 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் LPDDR5 மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் தலைமையிலான மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் புதிய Infinix Zero Ultra ஸ்மார்ட்போனில் இன்னும் பல சிறப்பான அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications