சிறந்த அம்சங்கள், மலிவு விலை: பிப்.,14 அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி!
இன்பினிக்ஸ் இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறி உள்ளது. பிராண்டின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ஜீரோ 5ஜி சாதனம் பிப்ரவரி 14 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்-ன் மைக்ரோசைட் மூலம் விற்பனைக்கு வரும். இந்தியாவில் இன்பினிக்ஸ்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5ஜி அம்சம், மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் போன்ற அம்சங்களுடன் வரும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி இந்தியா அறிமுகம் பிளிப்கார்ட் பட்டியலின்படி, இந்த சாதனம் பிப்ரவரி 14 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது பிளிப்கார்ட் மூலம் நாட்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேகமான 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு முன்பக்கத்தில் கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்புற பேனலில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதன் படங்களும் பகிரப்பட்டுள்ளன.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி அம்சங்கள்
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி அம்சங்களை பொறுத்தவரையில், இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது 6.67 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது 120 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சென் 900 சிப்செட் வசதியோடு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று கேமரா அமைப்பு
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது மூன்று கேமரா அமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 48 எம்பி பிரதான கேமரா, அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவையோடு வரும் என கூறப்படுகிறது. மேலும் சாதனத்தின் முன்புறத்தில் செல்பி வசதிக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் எனவும் இது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவுக்கு என ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான டைப் சி போர்ட் இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.15000 முதல் ரூ.20000 வரை அறிமுகமாக வாய்ப்பு
முன்னதாக இன்பினிக்ஸ் சிஇஓ அனீஷ் கபூர், இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி போன் ரூ.15000 முதல் ரூ.20000 வரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த சாதனத்தின் பல்வேறு பிரதான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன இது ரூ.20,000-க்கு குறைவான விலையில் வரும் என கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கும் நிலையில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. விரைவில் இந்தியாவில் 5ஜி அம்சம் அறிமுகமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் 5ஜி ஆதருடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இது என்பதால், இன்பினிக்ஸ் பிரியர்கள் ஆர்வமுடன் இதன் அறிமுகத்திற்கு காத்திருக்கின்றனர். அதேபோல் இந்த சாதனம் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications