Home
News

5ஜி சகாப்தத்தில் புதிய அறிமுகம்: பட்ஜெட் விலை, உயர்ரக அம்சங்களோடு இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது குறைந்த விலை உயர்நிலை அம்சங்களுடன் களத்தில் இறங்குகிறது. இந்த நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி சாதனத்தை இந்தியாவில் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரேம் மற்றும் சேமிப்பக மாறுபாட்டுடனான கிடைக்கும் தன்மையை விரிவாக பார்க்கலாம். இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு சுமார் ரூ.19,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்சு என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18 முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விற்பனையில் நீங்கள் சிறந்த சலுகைகளின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி சலுகைகள்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி சலுகைகள்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி வாங்குபவர்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால், 10% தள்ளுபடி அதாவது ரூ.750 வரை உடன் கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் 5% வரம்பற்ற கேஷ்பேக் உடன் வாங்கலாம். நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடனும் இந்த சாதனத்தை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு மாதம் ரூ.1667 இஎம்ஐ கட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விற்பனை எப்போது தொடங்கும் என்ற விற்பனை குறித்த விவரங்களை அறிவதற்கு Notify Me என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி: அம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி: அம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 2460 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், 500 நிட்ஸ் உச்ச பிரகாச அளவை கொண்டிருக்கிறது. இது சிறந்த காட்சி, ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் உள்ளிட்ட அனுபவத்தை மேம்பட்ட விதத்தில் வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளேயின் தரமான அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது 6என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்ட ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்ஷனாலிட்டி 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. அதோடு இது இன்ஃபினிக்ஸ் மம்ஃப்யூஷன் எனப்படும் மெய்நிகர் ரேம் சேமிப்பக விரிவாக்க அமைப்பைக் கொண்டிருக்கிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது யூனி-கர்வ் வடிவமைப்புடன் வருகிறது. மேலும் பின்பக்க கேமரா அம்சத்தை பொறுத்த வரையில் இந்த சாதனம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் தொடர் சாதனங்களை போன்றே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 48 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பை பொறுத்தவரையில் 13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் குவாட் எல்இடி ஃபிளாஷ் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது. சாதனத்தின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 960 எஃப்பிஎஸ் ஸ்லோ மோஷன் மற்றும் நைட் செல்ஃபி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்ட் 11 அடிப்படையிலான எக்ஸஓஎஸ் 10 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவு

டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவு

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 199 கிராம் ஆக இருக்கிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், 3டி கூலிங் மாஸ்டர், ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது. இந்த சாதனம் டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. விலை மற்றும் அம்சமங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆனது பிராண்டுகளிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Infinix Zero 5G Smartphone Launched in India With 5000 mAh Battery, Triple Rear Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X