பிச்சிக்கும் ப்ரீ-ஆர்டர்.. ரூ.21,999 போதும்.. 21GB ரேம்.. 108MP கேமரா.. கர்வ்ட் டிஸ்பிளே.. பர்ஸ்ட் டைம் மாடல்!
இந்தியாவில் வெளியான ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் போன்களையும் தூக்கிசாப்பிடும் வகையில் மிகவும் கம்மியான பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) போன் விற்பனைக்கு வருகிறது. நாளை ப்ரீ-ஆர்டர் தொடங்கும் வேளையில், அந்த போன் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 அம்சங்கள் (Infinix Zero 30 Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிசைன் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த போனில் கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 எஸ்ஓசி (MediaTek Dimensity 8020 SoC ) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) வருகிறது.
கேமிங் பிரியர்களுக்காக மாலி - ஜி77 ஜிபியு (Mali-G77 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அந்த வகையில் 108 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கோமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும்.
அதோடு ஏஐ லென்ஸ் மற்றும் குவாட் எல்இடி பிளாஷ் லைட் கொண்டுள்ளது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K 60 FPS சப்போர்ட் வருகிறது. செல்பீ கேமராவில், 60 FPS கொடுக்கப்படுவது, இதுவே முதல்முறையாகும். அதேபோல மெயின் கேமராவில் பிக்சல் ஜூமிங் டெக்னாலஜி (Pixel Zooming Technology), ஃபிலிம் மோட் (Film Mode), டூயல் வீடியோ ரெக்கார்டிங் போன்ற அம்சங்கள் இருக்கின்றன.
இந்த ஜீரோ 30 மாடல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. மொத்தமாக 21 ஜிபி ரேம் கொண்ட போனாக இது இருக்கப்போகிறது. இந்த போன் மிகவும் ஸ்லிம் டிசைனில் இருந்தாலும், 68W சூப்பர் சார்ஜ் (Super Charge) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதை வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் செய்துகொள்ளலாம். மிட்-ரேஞ்ச் போன்களில் வரும், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், பேஸ் அன்லாக் வருகின்றன. அதோடு டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. IP53 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் இருக்கிறது.
மேலும், என்எப்சி (NFC), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனின் பேனல் டிசைன் பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) கொண்டுள்ளது. அட்டகாசமான கோல்டன் ஹவர் (Golden Hour) மற்றும் ரோம் கிரீன் (Rome Green) ஆகிய 2 கலர்களில் வாங்கிகொள்ளலாம்.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று, இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ரூ.30,000 மதிப்புள்ள போனுக்கு ரூ.25,000 பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மார்கெட் வட்டாரங்கள் மிரண்டு போன நிலையில், இப்போது மேலும் வியக்கவைக்கும் விதமாக ரூ.21,999 விலையில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த போனின் ப்ரீ-ஆர்டர் நாளை (செப்டம்பர் 2) பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்குகிறது. இந்த ரூ.21,999 விலையிலும் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இந்தியாவில் முதல் முறையாக பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட மிட்-ரேஞ்ச் போனை பட்ஜெட் விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








