Home
News

பட்ஜெட் கிங்.. 5ஜி உண்டு.. ட்ரிபிள் கேமரா.. பெரிய பேட்டரி.. Infinix Zero 30 5G உடன் போட்டிக்கு யாரும் நிக்க மு

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில், பட்ஜெட் பிரிவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்பினிக்ஸ் ஜீரோ 30 5G (Infinix Zero 30 5G) என்று அழைக்கப்படும். பட்ஜெட் செக்மென்ட்டில் இதன் விற்பனை கலைக்கட்டப் போகிறது.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்த ஹார்ட்வேர் உடன் கவர்ச்சிகரமான தோற்றத்தை ஒருங்கிணைக்கிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 30 5G ஆனது வளைந்த கர்வுட் டிஸ்ப்ளே மற்றும் மீடியா டெக் டைமென்சிட்டி சிப்செட்டைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் iQOO Z7 Pro போன்ற அதே விலை பிரிவில் களமிறங்கியுள்ளது.

பட்ஜெட் கிங்.. 5ஜி உண்டு.. ட்ரிபிள் கேமரா.. பெரிய பேட்டரி..

எனவே இது iQOO இன் சாதனத்தை விட சிறந்ததா அல்லது சுமாரானதா? என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் 256 ஜிபி+12 ஜிபி ரேம் அல்லது 256 ஜிபி + 8ஜிபி ரேம் வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.24,999 மற்றும் 23,999 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் பேங்க் (Axis) வங்கி கார்டுகளை பயன்படுத்தி மொபைல் வாங்குபவர்கள் உடனடி தள்ளுபடியாக ரூ.2,000 பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் கோல்டன் ஹவர் மற்றும் ரோம் கிரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது. இது தற்போது பிளிப்கார்ட்டில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இதன் விற்பனை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.

Infinix Zero 30 5G ஆனது 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், FHD+ உடன் கூடிய 1080 × 2460 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்ட, 360Hz டச் சாம்பிளிங் வீதம், 2160 PWM டிம்மிங் மற்றும் 950 பீக் பிரைட்னஸ் உடன் 6.78' இன்ச் அளவு கொண்ட வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 சிப்செட் உடன் வருகிறது.

இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 13.1 உடன் வருகிறது. Infinix Zero 30 5G ஆனது 108MP கொண்ட பிரைமரி ஷூட்டர், 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் LED ப்ளாஷ் கொண்ட 2MP டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 50MP செல்பி ஷூட்டரை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரி யூனிட் மற்றும் 68W சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது. இந்த சாதனத்தின் இணைப்பு விருப்பங்களில் 5G Dual-SIM, 4G, WiFI 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.1, GPS மற்றும் சார்ஜ் செய்வதற்கான USB-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) vs iQOO Z7 Pro: எது சிறந்தது?
Infinix Zero 30 5G மற்றும் iQOO Z7 Pro 5G ஆகியவை அவற்றின் இரண்டு வகைகளுக்கும் ஒரே விலையைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை இரண்டும் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன, இவற்றின் அடிப்படையில், இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தல், இரண்டுமே வளைந்த பேனலைக் கொண்டுள்ளன.

எனவே அதில் எந்த ஒப்பீடும் இல்லை. ஆனால் இன்ஃபினிக்ஸ் பேனலில் ஒரு சிறிய எட்ஜ் உள்ளது. ஏனெனில் இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைப் பெறுகிறது. இது iQOO இன் அம்சத்தை விட அதிகமாகும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜியின் 950 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது. iQOO Z7 ப்ரோ பேனல் 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 5G Launched in India Under Budget Price Of Rs 23999 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X