Home
News

ஐயையோ இப்படி செஞ்சுட்டீங்களே ரஷ்யா.. தெரியாமல் லீக் ஆனா புது போன் தகவல்.. என்ன போன்? என்ன மாடல்?

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கும் பிராண்டாக சியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்கள் இந்திய மக்களிடையே தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த வரிசையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து, மக்களை கவர்ந்து வரும் பிராண்ட் தான் இன்பினிக்ஸ் (Infinix)

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம், அதன் ஸ்மார்ட்போன் போர்ட்போலியோவில் பெரிய மற்றும் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) என்ற மாடலை உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம், டைமென்சிட்டி 8020 சிப்செட் (Dimensity 8020 SoC) உடன் இயக்கப்படுகிறது.

ஐயையோ இப்படி செஞ்சுட்டீங்களே ரஷ்யா.. தெரியாமல் லீக் ஆனா புது போன்..

இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக இதன் 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா கூறப்பட்டது. 108 மெகாபிக்ஸல் உடன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட போனாக இந்த புதிய Infinix Zero 30 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் உலக சந்தையில் அடையாளம் காண்பித்தது. இது ஒரு 5ஜி மாடல் சாதனமாகும்.

இப்போது, ​​​​ஒரு புதிய லீக் தகவல், இன்பினிக்ஸ் பிராண்டில் இதே சீரிஸ் இல் ஒரு 4G எடிஷன் மாடல் அறிமுகமாகவுள்ளது என்ற தகவல் இனையத்தில் லீக் ஆகியுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. ரஷ்ய மொபைல் ஆபரேட்டர் நிறுவனமான எம்டிஎஸ் (MTS) இல் இருந்து இந்த லீக் வெளிவந்துள்ளது.

இது தற்செயலாக அதன் ஆன்லைன் ஸ்டோரில் வரவிருக்கும் Infinix Zero 30 4G ஸ்மார்ட்போன் பற்றி லீக் செய்துவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான புகைப்படம் Infinix Zero 30 4G என்பதை தெளிவாக காண்பிக்கிறது. இது இதன் முந்தைய மாடலான 5ஜி போல் இல்லாமல் சில மாற்றங்களையும் கொண்டுள்ளது என்பதை புகைப்பட விபரங்கள் தெளிவாக காண்பிக்கிறது. ஆனால், இதன் வடிவமைப்பு சற்று 5G மாடலை தழுவியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயையோ இப்படி செஞ்சுட்டீங்களே ரஷ்யா.. தெரியாமல் லீக் ஆனா புது போன்..

இருப்பினும், இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி மாடலின் கேமரா ஐலேண்ட் சற்று தரமிறக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், இது மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் வளைந்த டிஸ்பிளேவை ஆதரிக்கும் கேமராவை கொண்டுள்ளது. Infinix Zero 30 4G ஆனது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வளைந்த கர்வுடு கிளாஸ் AMOLED டிஸ்ப்ளேவைக் காட்டுகிறது. இது 5G மாறுபாட்டின் 144Hz ஐ விட சற்று குறைவாக உள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி சாதனம் ஆனது பின்புறத்தில் 108 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 5G பதிப்பின் திறன்களை பிரதிபலிக்கிறது. சிப்செட் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இன்பினிக்ஸ் ஜீரோ 30 4G சாதனம் ஹீலியோ ஜி99 (Helio G99) சிப்பைகொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

வீடியோ பதிவைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜியில் உள்ள முன்பக்கக் கேமரா, 5ஜி பதிப்பின் 4கே திறன்களிலிருந்து வேறுபட்டு, வினாடிக்கு 30 ஃப்ரேம்களில் 2K வீடியோவை ஆதரிக்கிறது. இந்த சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், ரஷ்ய வெளியீடு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய விபரகங்கள் வெளிவரும் வரை சற்று காத்திருக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 4G Details and Render Pictures Leaked Online In Russia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X