ஆரம்பமே ஆஃபர்.! 36% தள்ளுபடியுடன் Infinix Zero Ultra, Zero 20 விற்பனை.. ரூ.15,999 மட்டுமே!

|

Infinix Zero Ultra 5G, Zero 20 இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள Infinix Zero 20 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். அதேபோல் Infinix Zero Ultra 5G ஆனது மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன் ஆகும். மிட் ரேன்ஜ் விலையில் வளைந்த டிஸ்ப்ளே, 200 எம்பி கேமரா, 180 வாட்ஸ் சார்ஜிங் என பல மேம்பட்ட ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Infinix Zero Ultra 5G விற்பனை

Infinix Zero Ultra 5G விற்பனை

Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனின் விற்பனையானது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.49,999 என குறிப்பிட்டு 34 சதவீத சலுகை வழங்கப்பட்டு பின் ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக வங்கி தள்ளுபடிகளும், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.

Infinix Zero 20 விற்பனை

Infinix Zero 20 விற்பனை

Infinix Zero 20 ஸ்மார்ட்போனானது ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 என குறிப்பிட்டு 36 சதவீத சலுகை வழங்கப்பட்டு ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த போன் பிளிப்கார்ட்டில் விரைவில் விற்பனைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.

12 நிமிடத்தில் முழு சார்ஜிங்

12 நிமிடத்தில் முழு சார்ஜிங்

Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 180 வாட்ஸ் தண்டர் சார்ஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 12 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி சிப்செட்

Infinix Zero Ultra 5G மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Coslight Silver மற்றும் Genesis Noir வண்ண விருப்பங்களில் இது கிடைக்கிறது.

Infinix ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள்

Infinix ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள்

Infinix ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 மூலம் இயங்குகிறது. 6.8 இன்ச் ஃபுல் எச்டி+ வளைந்த 3டி AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டிருக்கிறது.

360Hz டச் மாதிரி ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. Infinix Zero Ultra ஆனது MediaTek Dimensity 920 SoC மூலம் இயக்கப்படுகிறது. விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

200 எம்பி பிரதான கேமரா

200 எம்பி பிரதான கேமரா

Infinix Zero Ultraவின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 200 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது.

32 எம்பி செல்பி கேமரா

32 எம்பி செல்பி கேமரா

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

180 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

180 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 180 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை 12 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Zero 20, Zero Ultra 5G Sale Start in India: How to Buy with Offer Price?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X