அடுத்த ப்ரீமியம் ரக ஸ்மார்ட்டிவி: ரொம்ப கம்மி விலை பாஸ்- இரண்டு அளவுகளில் இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட்டிவி!

|

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி தொடருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்த, நிறுவனம் அதன் எக்ஸ் பிளாக்ஷிப் தொடரில் மற்றொரு டிவியை வெளியிட தயாராகி வருகிறது. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரின் தகவல்படி, இன்பினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் முன்னதாக எக்ஸ்1 தொடரை முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து எக்ஸ்2 ஸ்மார்ட் டிவி தொடரை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு பதிலாக எக்ஸ்3 தொடரை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது.

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி சினிமா அனுபவத்திற்காக உயர்தர ஸ்டீரியோ ஒலியை கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அறிக்கையை வெளியிட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ரயாடு 11 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியான இரண்டு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் எனவும் அது 32 இன்ச் மற்றும் 40 இன்ச் ஆகும். இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்டிவியானது இந்தியாவில் மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 1 ஸ்மார்ட் டிவி ஆனது மூன்று அளவுகளில் வெளியிடப்பட்டது, அது 40 இன்ச், 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஆகும். இது பிரேம் குறைவான வடிவமைப்போடு வந்தது. அதாவது அதிக திரை விகிதத்தை கொண்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ இணக்கத்தன்மையை கொண்டிருக்கும் என நிறுவனம் கூறுகிறது.

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் மற்றும் விலை

இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் மற்றும் விலை

புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி ஆனது ப்ளூ ஒளி குறைப்பு தொழில்நுட்பம் கொண்ட 40 இன்ச் திரை உடன் வருகிறது. இந்த டிவி தீங்கு விளைவிக்கும் ப்ளூ ரே அளவை குறைக்கிறது. இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 திறன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் ஒரு ஜோடி 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோவுடன் வருகிறது. இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஸ்மார்ட் டிவி ஆனது மீடியாடெக் 64 பிட் குவாட் கோர் சிபியூ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது உள்ளமைக்கப்பட்ட க்ரோம் காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் டிவியின் 40 இன்ச் அளவு ரூ.19,999 என வெளியிட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் சமீபத்தில் இந்தியாவில் ஜீரோ 5ஜி சாதனத்தை அறிவித்தது. இது ஒற்றை 8 ஜிபி ரேம் விருப்பத்தில் வந்தது. இதன் விலை ரூ.19,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரேம் மற்றும் சேமிப்பக மாறுபாட்டுடனான கிடைக்கும் தன்மையை விரிவாக பார்க்கலாம். இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு சுமார் ரூ.19,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்சு என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18 முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விற்பனையில் நீங்கள் சிறந்த சலுகைகளின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 2460 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், 500 நிட்ஸ் உச்ச பிரகாச அளவை கொண்டிருக்கிறது. இது சிறந்த காட்சி, ஓடிடி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் உள்ளிட்ட அனுபவத்தை மேம்பட்ட விதத்தில் வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளேயின் தரமான அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Best Mobiles in India

English summary
Infinix X3 Smart TV Will Be Launched in India: Harmful Blue Rays, HDR 10, 120HZ Refresh Rate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X