அவசரப்படாதீங்க.. Amazon ஆஃபர்ல வேறெந்த போனும் வாங்கிடாதீங்க.. 2 நாள் வெயிட் செஞ்சு இந்த போன் வாங்குங்க..
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், அதன் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை வரும் ஜனவரி 15ம் தேதி நடைபெறுகிறது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix SMART 8) சாதனத்தை ஸ்மார்ட் சீரிஸ் வரிசையின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.6" இன்ச் HD+ 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8MP கேமரா LED பிளாஷ் உடன் வருகிறது.

இன்பினிக்ஸ் வரிசையில் 90Hz டிஸ்பிளேவை பெரும் முதல் சாதனம் இதுவாகும். மீடியாடெக் ஹீலியோ G36 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவை இந்த சாதனம் கொண்டுள்ளது. இது பின்பக்கத்தில் 50MP ரியர் கேமராவுடன் AI லென்ஸ் அம்சத்துடன் வருகிறது. இதன் டிஸ்பிளேவில் இன்-பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix SMART 8):
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சாதனம் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 13 உடன் XOS 13 (Android 13 Go Edition with XOS 13) இயங்குதளத்தில் இது இயங்குகிறது. இதன் கேமரா மாட்யூல் பார்ப்பதற்கு ஐபோன் ப்ரோ மாடல் போல இருக்கிறது. ஆனால், இது டூயல் கேமரா அம்சத்துடன் மட்டுமே வருகிறது.
Infinix Smart 8 ஆனது டிம்பர் பிளாக், ஷின்னி கோல்ட், கேலக்ஸி ஒயிட் மற்றும் ரெயின்போ ப்ளூ வண்ணங்களில் வருகிறது. Flipkart இல் இருந்து ஜனவரி 15 ஆம் தேதி முதல் ரூ. 7,499 விலையில் வாங்க கிடைக்கும். இது ICICI வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டு பயணர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கூடுதல் சலுகையாக 10% தள்ளுபடி வழங்கும். இதன் மூலம் இதன் விலை ரூ. 6,749 ஆகி குறைகிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சிறப்பம்சம் (Infinix SMART 8 Specification):
- 6.6" இன்ச் 1612 x 720 பிக்சல்கள் உடன் HD+ டிஸ்பிளே
- 500 நீட்ஸ் பிரைட்னஸ், 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ,
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 180Hz டச் சாம்பிளிங் வீதம்
- 2.2 GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 சிப்செட்
- IMG PowerVR GE8320 @ 680MHz ஜிபியு
- 4ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம்
- 3ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 64ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்
- 2டிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்
- XOS 13 உடன் Android 13 Go எடிஷன்
- டூயல் நானோ சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
- 50MP பின்புற கேமரா, AI லென்ஸ், குவாட் LED ரிங் ஃபிளாஷ்
- LED ப்ளாஷ் கொண்ட 8MP முன் கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4G VoLTE
- Wi-Fi 802.11 ac
- புளூடூத் 5.0
- GPS + க்ளோனஸ் (GLONASS)
- USB டைப்-C
- 5000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








