Home
News

பட்ஜெட் விலை.. 50MP கேமரா.. 2TB வரை ஸ்டோரேஜ்.. 6.6 இன்ச் HD+ டிஸ்பிளே.. விலை என்ன? என்ன மாடல்?

இன்பினிக்ஸ் (Infinix) பிராண்ட் அதன் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infini Smart 8) மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 HD (Infinix Smart 8 HD) ஆகிய ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. இன்பினிக்ஸ் பிராண்ட் சமீபத்தில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ (Infinix SMART 8 Pro) என்ற ஸ்மார்ட்போனை அதன் உலகளாவிய இணையதளத்தில் விலை மற்றும் கிடைக்கும் தன்மையைக் குறிப்பிடாமல் பட்டியலிட்டுள்ளது.

பட்ஜெட் விலை.. 50MP கேமரா.. 2TB வரை ஸ்டோரேஜ்.. 6.6 இன்ச் HD+ டிஸ்பிளே

இப்போது இன்பினிக்ஸ் பிராண்ட் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ளஸ் (Infinix Smart 8 Plus) எனப்படும் மற்றொரு ஸ்மார்ட் 8 சீரிஸ் போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் வேரியண்ட் என்ன வழங்குகிறது என்பதை இப்போது பார்க்கலாம். புதிய Infinix Smart 8 Plus ஆனது 6.6' இன்ச் IPS LCD டிஸ்பிளேவைக் (Display) கொண்டுள்ளது.

இதன் மையத்தில் ஒரு பஞ்ச்-ஹோல் (punch-hole) கட்அவுட் வழங்கப்பட்டுள்ளது. இது 720 x 1612 பிக்சல்களின் HD+ தெளிவுத்திறனையும், 20:9 விகிதத்தையும், 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) வீதத்தையும், 500 nits வரை பிரைட்னஸ் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாதனம் 8 மெகாபிக்சல் செல்ஃபி (selfie camera) கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் வருகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) பின் பேனலில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, AI லென்ஸ் மற்றும் குவாட்-எல்இடி ஃபிளாஷ் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) சாதனம் ஹீலியோ ஜி36 (Helio G36) சிப்செட் உடன் சக்தி பெறுகிறது.

பட்ஜெட் விலை.. 50MP கேமரா.. 2TB வரை ஸ்டோரேஜ்.. 6.6 இன்ச் HD+ டிஸ்பிளே

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) சாதனம் 4GB LPDDR4x ரேம் மற்றும் 64GB | 128GB ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இது கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB மற்றும் 2TB ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) சாதனம் XOS 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 கோ (Android 13 Go) உடன் வெளிவரும் என்றும், இதற்கு பின் இதை பயனர்கள் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு பாதுகாப்பிற்காக பக்கவாட்டு கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது USB-C போர்ட் வழியாக 18W சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) சாதனம் டூயல் சிம், 4G VoLTE, Wi-Fi 802.11ac, புளூடூத் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பிற அம்சங்களை வழங்குகிறது.

இந்த சாதனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் டிம்பர் பிளாக் (Timber Black), கேலக்ஸி வைட் (Galaxy White) மற்றும் ஷைனி கோல்டு (Shiny Gold) நிறங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 Plus Spotted With Helio G36 Chipset and 50MP AI Camera with 6000mAh Battery Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X