Infinix Smart 8 HD: அறிமுக ஆஃபரே அதிருத்து.. ரூ.5699 விலையில் விற்பனைக்கு ரெடி.. மிஸ் பண்ணவே கூடாது..
வெயிட்டிங் ஓவர், ஸ்மார்ட்போன் மார்க்கெட்டையே புரட்டி போடப்போகும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) சாதனம் இப்போது வெளியாகியுள்ளது. இந்த போனை ரூ.5,699 விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் டிசம்பர் 13ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி அறிமுக விற்பனை (Infinix Smart 8 HD sale) விரைவில் நடைபெறவுள்ளதால், இந்த சாதனத்தின் மீது சில அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD):
இந்த ஸ்மார்ட்போன் 6.6" இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) எச்டி+ டிஸ்ப்ளேவுடன் (display) வருகிறது. இது 90Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) வீதத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி வரை ரேம் உடன் வருகிறது. இது மெமரி கார்டு மூலம் 2TB வரை ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. இது இப்போது நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
கிரிஸ்டல் கிரீன் (Crystal Green), ஷைனி கோல்ட் (Shiny Gold), டிம்பர் பிளாக் (Timber Black) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் (3GB + 32GB storage) மாடல் ரூ.6,299 அசல் விலையில் விற்பனைக்கு வருகிறது. அறிமுகம் சலுகையாக இந்த போனின் மீது 10% ஆக்சிஸ் பேங்க் சலுகை கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி விலை (Infinix Smart 8 HD price):
இதன் மூலம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,699 விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது. டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது யூனிஸாக் T606 (UniSOC T606 SoC) சிப்செட் உடன் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) சாதனம் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உடன் வேலை செய்கிறது. இந்த சாதனம் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் (3GB RAM + 32GB Storage) வருகிறது. இந்த போனில் மைக்ரோஎஸ்டி கார்ட் (microSD card) வழியாக 2TB மெமரியை வழங்குகிறது. இது 180 டச் சாம்பிளிங் ரேட் உடன் வருகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி கேமரா (Infinix Smart 8 HD camera):
இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது 13MP மெயின் கேமராவுடன் ஏஐ (AI) சென்சார் உடன் வருகிறது. இது முன்பக்கத்தில் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதில் மேஜிக் ரிங் (Magic Ring) அம்சத்துடன் ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் (Apple's Dynamic Island) அம்சத்துடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான கோ எடிஷன் (GoEdition) இயங்குதளத்துடன் வருகிறது.
இது XOS 13 ஸ்கின் உடன் வருகிறது. இது 10W சார்ஜிங் உடன் 5000mah பேட்டரி உடன் வருகிறது. 4ஜி எல்டிஇ (4G LTE), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), டூயல்-பேண்ட் வைஃபை (dual band WiFi) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆதரவுடன் வருகிறது. இது 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (3GB Virtual RAM), டிடிஎஸ் செயலாக்கம் அம்சத்துடன் வருகிறது.
இது பவர் மராத்தான் டெக் (Power Marathon Tech), போட்டோ கம்ப்ரசர் (Photo Compressor), 360 ஃப்ளாஷ்லைட் (360 Flashlight), ஐ கேர் (Eye Care), ஏஐ கேலரி (AI Gallery), மெம்-ஃப்யூஷன் (Mem-Fusion) மற்றும் டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) அம்சத்துடன் வருகிறது. இந்த விலையில் இத்தகைய பெஸ்ட் அம்சங்களை பேக் செய்த ஒரே சாதனம் இது தான்.


Click it and Unblock the Notifications








