Home
News

உங்க பழைய போனை கொடுத்து ரூ.549-க்கு புது Infinix SMART 7 வாங்கலாம்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

பெரியளவு செலவே இன்றி, வெறும் சில நூறு ரூபாய்களில் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். அப்போ, இது தான் ரைட் டைம், உங்கள் பழைய போனை நல்ல ரேட்டிற்கு விற்பனை செய்துவிட்டு ரூ.549 விலையில் புது போனை வாங்கிக்கொள்ளுங்கள்.

பழைய போனை விற்பனை செய்து, இந்த புதிய Infinix SMART 7 போனை வெறும் ரூ.549 விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த Infinix SMART 7 ஸ்மார்ட்போனின் அசல் விலை இந்தியாவில் ரூ.9,999 ஆக அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது பிளிப்கார்ட் சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 7,499 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால், கூடுதல் சலுகையை பயன்படுத்தினால் வெறும் ரூ.549 விலையில் வாங்க சிலருக்கு வாய்ப்புள்ளது.

உங்க பழைய போனை கொடுத்து ரூ.549-க்கு புது Infinix SMART 7 வாங்கலாம்!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இது தான் சரியான நேரம். Flipkart இல் சலுகையுடன் கிடைக்கும் Infinix SMART 7 சிறந்த தேர்வாகும். இந்த போன் 25% தள்ளுபடி உடன் நம்பமுடியாத ஒப்பந்தத்துடன் வருகிறது. இது ஒரு பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. இது HD+ 6.82' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது சக்தி வாய்ந்த ஆக்டா-கோர் சிப்செட் உடன் வருகிறது. இந்த சாதனம் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் இருப்பதால், ஸ்டோரேஜ் தீர்ந்துவிடும் என்று கவலைப்படாமல் பல ஆப்ஸ், மூவிஸ் மற்றும் கேம்களை தாராளமாக பயன்படுத்தலாம். Infinix SMART 7 ஆனது அதன் நவீன வடிவமைப்பு மற்றும் அழகிய Azure Blue வண்ணத்துடன் வருகிறது. Infinix SMART 7 கையடக்க சாதனமாக, சிறந்த அம்சங்களுடன் வருகிறது.

சிறந்த Infinix SMART 7 ஃபோன் தெளிவான 13 MP டூயல் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. அவுட்டோர் இல் இந்த கேமரா சிறந்து செயல்படுகிறது. இருட்டான இடங்களில் இருக்கும் போது, சக்திவாய்ந்த டூயல் ஃப்ளாஷ் அம்சத்துடன் துல்லியமான புகைப்படங்களை படம்பிடிக்கிறது. கேமரா அம்சத்தை பொறுத்த வரை Infinix SMART 7 ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

இது இப்போது Flipkart இல் நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. இந்த போனின் வழக்கமான விலை ரூ. 9999 ஆகும். ஆனால், இந்த தள்ளுபடி மூலம், ரூ.7499 விலையில் சலுகையுடன் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.2500 சேமிப்பு தொடையை வழங்குகிறது. உங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்ய பிளிப்கார்ட் அனுமதிக்கிறது. இதன் மூலம் ரூ. 6950 வரை உங்களுக்கு எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது.

இந்த சலுகை சில பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. இதனால், வெறும் ரூ.549 விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் பழைய போனின் விலையை ஆன்லைனில், பிளிப்கார்ட் தீர்மானிக்கிறது. இந்த சலுகையை தவறவிடாமல் உடனே உங்களுக்கான புது போனை வாங்கலாம். குறைந்த விலையில் புது போன் வாங்க நினைப்பவர் இந்த மாடலை தவறவிட கூடாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix SMART 7 Gets Unbelievable Exchange Offer Of Rs 6950 Via Flipkart India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X