ரூ.7999 க்கு துவம்சம் செய்த Infinix- டூயல் ப்ளாஷ் லைட், ஆண்ட்ராய்டு 12, 5000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்

|

Infinix Smart 6 Plus இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்பினிக்ஸ் இன்னும் முழுமையாக பிரபலமடையவில்லை என்றாலும் வளர்ச்சியடைவதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் முதல் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவு வரை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு புது ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது.

ஸ்மார்ட் 6 மாடலின் மேம்பட்ட பதிப்பு

ஸ்மார்ட் 6 மாடலின் மேம்பட்ட பதிப்பு

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் டீசர்படி, நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு புது ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் 6 மாடலின் மேம்பட்ட பதிப்பாக இருக்கிறது.

விரச்சுவல் ரேம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) என பல சிறப்பங்களுடன் வெளியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 3 மூலம் விற்பனை தொடரும்

ஆகஸ்ட் 3 மூலம் விற்பனை தொடரும்

தற்போது வெளியாகியுள்ள புது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அது டிரான்குயில் சீ ப்ளூ மற்றும் மிராக்கிள் ப்ளாக் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 3 முதல் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை என்று கூட குறிப்பிடுவதை விட மலிவு விலை என கூறலாம்.

காரணம் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் விலை ரூ.7,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி சி30, ரெட்மி 10ஏ, டெக்னோ ஸ்பார்க் 9 போன்ற பட்ஜெட் ஸ்மாரட்போன்களுக்கு இணை போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Infinix Smart 6 Plus சிறப்பம்சங்கள்

Infinix Smart 6 Plus சிறப்பம்சங்கள்

Infinix Smart 6 Plus சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 இன் மேம்பட்ட பதிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் 6.82 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

இதன் பேனலானது 90.66% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் 440 நிட்ஸ் பிரகாசம் கொண்டதாக இருக்கிறது. அதோடு கூடுதல் பாதுகாப்புக்கு என டிஸ்ப்ளேவில் பாண்டா MN228 க்ளாஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் ஆதரவு

மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் ஆதரவு

அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 2GHz வேகத்தில் இயங்கக்கூடிய ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

டூயல் எல்இடி ப்ளாஷ் லைட்

டூயல் எல்இடி ப்ளாஷ் லைட்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 8 எம்பி முதன்மை கேமரா மற்றும் டெப்த் சென்சார் என டூயல் கேமரா அமைப்பு உள்ளது.

கூடுதலாக ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயக்க ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயக்க ஆதரவு

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4G VoLTE, டூயல் சிம் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இருக்கிறது.

பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் நீடித்த ஆயுள் கொண்ட 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

ஆரம்பமே சலுகையுடன் வாங்கலாம்

ஆரம்பமே சலுகையுடன் வாங்கலாம்

ஆகஸ்ட் 3 முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனானது தற்போதே பிளிப்கார்ட் தளத்தில் (Coming Soon) என பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு வெளியீட்டு சலுகைகளும் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.750 வரை தள்ளுபடியை பெறலாம்.

அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மூலம் EMI பரிவர்த்தனைகள் செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியை பெறலாம்.

ஆக்சிஸ் பேங்க் கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ அறிமுகம்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ அறிமுகம்

அதேபோல் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.15,990 என்ற விலைப் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.20,000 விலைப் பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பட்ஜெட் விலையில் மேம்பட்ட ஆதரவுகள்

பட்ஜெட் விலையில் மேம்பட்ட ஆதரவுகள்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

2400 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி இதில் இருக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆதரவுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. 108 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 6 Plus Launched In India with Dual Flash, Android 12 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X