Infinix Smart 6 HD: சத்தியமா நம்ப முடியல! ரூ.5000 இருந்தா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

|

Infinix நிறுவனம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதன் ஸ்மார்ட்போன் வரிசை மாடலில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 எச்டி (Infinix Smart 6 HD) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை சேர்த்து, அறிமுகம் செய்தது. இப்போது, இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை இந்தியாவில் சில அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது. இந்த குறுகிய கால அறிமுக சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 5000 விலை வரம்பில் நீங்கள் வாங்கிட முடியும்.

புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போனை எப்படி குறைந்த விலையில் வாங்கலாம்?

புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போனை எப்படி குறைந்த விலையில் வாங்கலாம்?

சரி இந்த புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் மாடலை எப்படி மிகக் குறைந்த விலையில் சலுகையுடன் வாங்கலாம்? இந்த புதிய டிவைஸை எங்கிருந்து வாங்கலாம்? எப்படி இந்த சாதனத்திற்கான அசல் விலையில் இருந்து, விலையைக் குறைத்துச் சாமர்த்தியமாக வாங்கலாம்? எப்படி மிகவும் குறைந்த விலையில் புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாம் என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம். இப்படி ஒரு அரிய வாய்ப்பு மீண்டும் கிடைப்பது சந்தேகம் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

Infinix Smart 6 HD போனின் முக்கியமான அம்சமே இது தான்

Infinix Smart 6 HD போனின் முக்கியமான அம்சமே இது தான்

சீனாவின் ட்ரான்ஸ்ஷன் குழுமத்திற்குச் சொந்தமான Infinix பிராண்டின், இந்த புதிய பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியா ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்காக மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் Mediatek Helio A22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 மெகாபிக்சல் AI-ஆதரவு கொண்ட ரியர் கேமராவை கொண்டுள்ளது. Infinix Smart 6 HD ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மலிவு விலை ஸ்மார்ட்போனில் ஏகபோக அம்சங்கள்

மலிவு விலை ஸ்மார்ட்போனில் ஏகபோக அம்சங்கள்

இது ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலும் கூட, இதில் உள்ள சிறப்பம்சங்கள் எல்லாம் டீசெண்டாக அமைந்துள்ளது. இந்த டிவைஸ் DTS சரவுண்ட் சவுண்டுடன் கூடிய ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த விலையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 135 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

Infinix Smart 6 HD போனின் விலை என்ன தெரியுமா?

Infinix Smart 6 HD போனின் விலை என்ன தெரியுமா?

சரி, இந்த Infinix Smart 6 HD போனின் முக்கிய அம்சங்களைப் பார்த்துவிட்டோம், அடுத்து இதை எப்படிக் குறைந்த விலையில் வாங்குவது என்று பார்க்கலாம். புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 6,799 ஆகும். ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள், இந்த Infinix Smart 6 HD டிவைஸ் இப்போது ரூ. 6,799 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. ஆனால், இதன் விலையை இன்னும் குறைக்க சில வழிகள் இருக்கிறது.

எங்கிருந்து இந்த ஸ்மார்ட்போனை சலுகை விலையில் வாங்கலாம்?

எங்கிருந்து இந்த ஸ்மார்ட்போனை சலுகை விலையில் வாங்கலாம்?

இந்த விலை ஒரு அறிமுக கால சிறப்பு விற்பனை விலை என்று கூறப்படுகிறது. இந்த அறிமுக சலுகையின் காலம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது குறித்த எந்த வார்த்தையும் இல்லை. இருப்பினும், இப்போது இந்த சாதனம், இந்த விலையில் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது அக்வா ஸ்கை, ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஆரிஜின் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

புதிய Infinix Smart 6 HD விலையை எப்படி குறைத்து வாங்குவது?

புதிய Infinix Smart 6 HD விலையை எப்படி குறைத்து வாங்குவது?

சரி, இப்போது இந்த புதிய Infinix Smart 6 HD ஸ்மார்ட்போனின் விலையை எப்படி இன்னும் குறைவாக குறைத்து வாங்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். Flipkart இ-காமர்ஸ் இணையதளம் ICICI வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் இந்த டிவைஸை வாங்கும் போது சுமார் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது, ரூ. 750 வரை விலையைக் குறைத்து வழங்குகிறது. இதன் மூலம், Infinix Smart 6 HD சாதனத்தின் விலை ரூ. 6,049 விலைக்குக் குறைகிறது.

BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!

ரூ.5,000 விலை வரம்பில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க என்ன செய்ய வேண்டும்?

ரூ.5,000 விலை வரம்பில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க என்ன செய்ய வேண்டும்?

கூடுதலாக, கோடக் மஹிந்திரா வங்கி கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி டிவைஸை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, ரூ. 1,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் Infinix Smart 6 HD ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,799 விலையில் இருந்து ரூ. 5,799 என்ற விலை வரை குறைகிறது. உண்மையில் இது ஒரு சிறந்த ஒப்பந்தமாகும். ரூ.5000 விலைப் புள்ளியில் டீசெண்டான ஸ்பெக்ஸ்களுடன் வாங்கக் கிடைக்கும் புதிய சாதனம் இது என்பதில் சந்தேகமில்லை.

Infinix Smart 6 HD சிறப்பம்சம்

Infinix Smart 6 HD சிறப்பம்சம்

Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன் சாதனம் 6.6' இன்ச் கொண்ட எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் குவாட் கோர் 12nm உடைய MediaTek Dimensity A22 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த டிவைஸ் 2GB LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது. கூடுதலாக இன்டர்னல் ஸ்டோரேஜைப் பயன்படுத்தி ரேம் அளவை கிட்டத்தட்ட 4ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய வசதியையும் இந்த போன் கொண்டுள்ளது. Infinix Smart 6 HD ஆனது 32GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது.

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் அம்சம்

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் அம்சம்

இருப்பினும், பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை 512ஜிபி வரை விரிவாக்கக் கூடிய ஆதரவையும் இது கொண்டுள்ளது. இது டூயல் நானோ சிம் ஆதரவுடன், ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தில் இயங்குகிறது. கேமரா அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில், இது டூயல் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் AI ரியர் கேமராவுடன் வருகிறது.

Ai ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்! ஹை-டெக் அனுபவம் எப்படி இருந்தது?Ai ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்! ஹை-டெக் அனுபவம் எப்படி இருந்தது?

மலிவு விலையில் வாங்க பெஸ்ட் போனா இது?

மலிவு விலையில் வாங்க பெஸ்ட் போனா இது?

முன்பக்கத்தில் டூயல் LED ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் கேமராவை Infinix Smart 6 HD கொண்டுள்ளது. இது 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v4.2 மற்றும் GPS/ A-GPS ஆகியவற்றை ஆதரிக்கிறது. மலிவு விலையில் டீசெண்டான அம்சங்களுடன் வாங்க கிடைக்கும் பெஸ்ட் டிவைசாக இந்த Infinix Smart 6 HD டிவைஸ் இருக்கிறது. உங்களுடைய தேவையை இந்த டிவைஸ் பூர்த்தி செய்யுமா என்ற கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 6 HD Sale With Launch Price and Discount Details From Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X