Home
News

வெறும் ரூ. 6,999 விலையில் இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட்போனா? எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியச் சந்தையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது என்று இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இணையதளத்தில் ஒரு பிரத்தியேக மைக்ரோசைட் விளம்பரம் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. வெளியிடப்பட்ட தகவலின் படி, இந்த சாதனம் பட்ஜெட் சலுகையாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, பாதுகாப்பிற்காகப் பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பின்புறத்தில் ஒரு சதுர தொகுதி இரட்டை கேமராக்களைக் கொண்டிருக்கும். இது பிளாக், ஓசன் வேவ்ஸ் மற்றும் குவெட்சல் சியான் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்தச் சாதனம் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வரும் என்று தகவல் உறுதியாகியுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A சிறப்பம்சம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A சிறப்பம்சம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளேவுடன் செல்ஃபி கேமராவிற்கான நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 500 நைட்ஸ் பிரகாசம் மற்றும் குறுகிய பெசல்களுக்கான வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. புதிய ப்ரிஸம் ஃப்ளோ டிசைனுடன் இது வருகிறது. இது 8.7 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொண்டது. இந்த புதிய ஸ்மார்ட் 5 ஏ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை எச்டி வீடியோ பிளேபேக், 16 மணிநேர வலை உலாவுதல் மற்றும் 13 மணிநேர கேமிங் ஆகியவற்றுடன் 19 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

கேமராவை பொறுத்தவரை ​​இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A இரட்டை கேமராக்களைக் கொண்டிருக்கும் மற்றும் LED ப்ளாஷ் உடன் வருகிறது. இது 2MP இரண்டாம் நிலை சென்சார் கொண்ட 13MP முதன்மை கேமரா கொண்டிருக்கும் என்று தகவல்கள் உள்ளன. பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பாதுகாப்புக்காக ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் உள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்தில் உள்ளது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை கீழே உள்ளது. சிம் ஸ்லாட் பிரிவு இடதுபுறத்தில் உள்ளது.

ரூ. 6,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறதா?

ரூ. 6,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறதா?

ஃபிளிப்கார்ட் பட்டியல் வெளிப்படுத்துவது போல் இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் ஜோடியாக மீடியாடெக் ஹீலியோ ஜி 25 சிப்செட் உடன் வரலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ விலை, முழு விவரக்குறிப்புகள் மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வரும்போது நாம் இன்னும் உறுதியான சில தகவலைப் பார்க்க முடியும். தற்பொழுது வெளியாகியுள்ள கசிவின் படி இந்த சாதனம் ரூ. 6,999 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 5A specifications and India launch date revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X