இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A போன் வெறும் ரூ. 6,499 விலையில் அறிமுகம்.. விற்பனை தேதி இது தான்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று புதிதாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ ஸ்மார்ட்போன் சாதகமானது 6.52' இன்ச் டிஸ்பிளேவுடன், மீடியாடெக் ஹீலியோ ஏ 20 சிப்செட் உடன், 5000 எம்ஏஎச் சக்தி கொண்ட பேட்டரி மூலம் செயல்படுகிறது. இந்த புதிய சாதனத்தின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் HD+ IPS LCD டிஸ்பிளே, பாதுகாப்பிற்காகப் பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பின்புறத்தில் ஒரு சதுர தொகுதி இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது பிளாக், ஓசன் வேவ்ஸ் மற்றும் குவெட்சல் சியான் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்தச் சாதனம் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ப்ரிஸம் ஃப்ளோ டிசைனுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A

புதிய ப்ரிஸம் ஃப்ளோ டிசைனுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவில் வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 500 நைட்ஸ் பிரகாசம் மற்றும் குறுகிய பெசல்களுடன் வருகிறது. புதிய ப்ரிஸம் ஃப்ளோ டிசைனுடன் இது வருகிறது. ஹீலியோ A20 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன், அதிக சேமிப்பிற்காக, இது ஒரு பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை கொண்டுள்ளது.

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போனின் கேமராவை பொறுத்தவரை, ​​இது டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் LED ப்ளாஷ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் கொண்டிருக்கும். பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பாதுகாப்புக்காக ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் உள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்தில் உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி சக்தி

5000 எம்ஏஎச் பேட்டரி சக்தி

இந்த புதிய சாதனம் 8.7 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொண்டது. இந்த புதிய ஸ்மார்ட் 5 ஏ ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் நீடித்து நிலைக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இனி பேட்டரி சார்ஜ் பற்றிய கவலை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ பயனர்களுக்கு தேவையில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை போனின் அடி பகுதியில் உள்ளது. சிம் ஸ்லாட் பிரிவு இடதுபுறத்தில் உள்ளது.

ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!

விலை மற்றும் விற்பனை விபரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

விலை மற்றும் விற்பனை விபரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A விலை பற்றி பார்க்கையில், உண்மையில் இன்பினிக்ஸ் நிறுவனம் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. காரணம், இத்தனை முக்கிய அம்சங்களுடன் களமிறங்கிய இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வெறும் ரூ .6,499 என்ற விலையில் மிட்நைட் பிளாக், ஓஷன் வேவ் மற்றும் குவெட்சல் சியான் வண்ணங்களில் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 5A Launched In India At An Introductory Price Of Rs 6499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X