5000எம்ஏஎச் பேட்டரியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விபரங்கள்.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் நைஜீரியாவில் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் குவெட்சல் சியான் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 மாடல் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பளே

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் 1640 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதம் மற்றும்480nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது.

 சிபியு மற்றும் ஆண்ட்ராய்டு

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.8ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1.3ஜிகாஹெர்ட்ஸ் சிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

60 சதவீதம் வரை தள்ளுபடி: ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை அறிவிப்பு!60 சதவீதம் வரை தள்ளுபடி: ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை அறிவிப்பு!

 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ர்ட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + இர

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + இரண்டு QVGA சென்சார் என மொத்தம் மூன்று பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, மூன்று எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

மனைவி மடியில் வேறொரு ஆண்; அம்பலப்படுத்திய கூகிள் மேப்ஸ்! கணவர் கண்ட காட்சி இதுதான்!மனைவி மடியில் வேறொரு ஆண்; அம்பலப்படுத்திய கூகிள் மேப்ஸ்! கணவர் கண்ட காட்சி இதுதான்!

சாதனத்தில் 5000எம்ஏஎச்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4 ஜி வோல்ட்இ, வைஃபை,

குறிப்பாக இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 5 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X