நாளை: ரூ.9,999-விலையில் முதல் முறையான விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ.!
இன்பினிக்ஸ் நிறுவனம் நாளை முதல்முறையாக தனது இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பாப்-அப் செல்பீ கேமராவுடன் சற்று
கம்மி விலையில் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மதியம் 12மணி அளவில்
குறிப்பாக நாளை மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த அசத்தலான பாப்-அப் செல்பீ கேமரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
இந்த இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் உடன் XOS 6.0வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா வசதி
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + லோ லைட் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் பச்சை மற்றும் வயலட் நிறங்களிலல் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4000எம்ஏச் பேட்டரி
இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏச் பேட்டரி வசதி உள்ளது, எனவே வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக உதவும். மேலும் 10வாட் பாஸ்ட் சாரஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட். 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








