கலர் மாறும்.. பேக் பேனல் கஸ்டமைஸ்.. காற்றில் சார்ஜிங்.. கடுமையான பேட்டரி.. அலப்பறை செய்யும் Infinix..
இன்பினிக்ஸ் (Infinix) 2024 இல் டாப் பெஸ்ட் நிறுவனமாக மாறப்போகிறது என்பது அதன் புதிய கண்டுபிடிப்புகளை வைத்து பார்க்கையில் தெளிவாக விளங்குகிறது. நிறுவனம் கலர் ஷிஃப்ட் ஸ்மார்ட்போன் சாதனம், ஏர்சார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரீம் டெம்ப் பேட்டரி போன்ற தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது.
CES 2024 நிகழ்வு நேற்று முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓவொரு நிறுவனங்களும் அதன் புதிய தொழில்நுட்பம் மற்றும் கான்செப்ட்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் இன்றைய நிகழ்வில் CES 2024 நிகழ்வுக்கு வந்தவர்களை கவர்ந்த புதிய தொழில்நுட்பமாக இன்பினிக்ஸ் அறிமுகம் செய்த கலர் ஷிஃப்ட் மொபைல் பேனல் இருந்தது. இதை நிறுவனம் இ-கலர் ஷிஃப்ட் (E-Color Shift) என்று அழைக்கிறது.

ஒப்போ (Oppo) மற்றும் விவோ (Vivo) நிறுவனங்கள் அறிமுகம் செய்த கலர் மாறும் பேனல் போன்றதல்ல இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ மற்றும் விவோ போன்களில் வாங்க கலர் சேஞ்சிங் அம்சம் (Color changing smartphones) வெயிலில் நிறம் மாறும். ஆனால், இது அப்படிப்பதல்ல. இந்த இ-கலர் ஷிஃப்ட் பேனல் (E-color shift phone panels) உங்களுக்கு விருப்பமான நிறத்தை கஸ்டமைஸ் செய்து பேனலில் பிரதிபலிக்க செய்கிறது.
இந்த இ-கலர் ஷிஃப்ட் போன் பேனல்ஸ் மிகவும் துடிப்பான வைப்ரன்ட் நிறங்களை (Vibrant colors) கூடுதல் பவர் தேவையின்றி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் 60 வகையான கஸ்டமைசேஷன் (60 variety of color shift customisation) விருப்பங்களை வழங்குவதாக இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான பிரத்தியேகமான சாப்ட்வேர் (Software) மற்றும் ஹார்டுவேர் (Hardware) அம்சத்தை நிறுவனம் எதிர்பார்க்கிறது.
உங்கள் விருப்பம், உங்கள் மூட் (Mood), உங்கள் ஸ்டைலிற்கு (Style) ஏற்ற டிசைனை நீங்கள் இந்த பேனலில் கஸ்டமைஸ் (Phone customise) செய்துகொள்ளலாம். உங்கள் தணிவதிற்கு ஏற்ப உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனை (Smartphone) இனி தாராளமாக நீங்கள் கஸ்டமைஸ் செய்து பயனப்டுத்தலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இன்பினிக்ஸ் நிறுவனம் காற்றில் சார்ஜ் ஆகும் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் இப்போது இன்பினிக்ஸ் ஏர்சார்ஜ் (Infinix AirCharge) மற்றும் எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி (Extreme Temp Battery) போன்ற அம்சங்களையும் அதன் வருங்கால ஸ்மார்ட்போனிற்காக இன்பினிக்ஸ் உருவாக்கியுள்ளது. இந்த ஏர்சார்ஜிங் தொழில்நுட்பம், உங்கள் போனை காற்றில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதாவது எந்தவொரு பிஸிக்கல் காண்டாக்டும் (Physical contact) இல்லாமல் 20cm அந்தரத்தில் 60 டிகிரி கோணத்தில் சர்ஜரின் அருகில் இருந்து சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

இந்த அம்சத்தின் உதவியுடன் இனி மக்கள் வயர்லெஸ் சார்ஜரில் (Wireless charging) அவர்களுடைய போனை இணைக்காமல், கேம் (Games) மற்றும் திரைப்படங்கள் (Movies) போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளை தாராளமான மகிழும் விதத்தில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இனி சார்ஜ்ரில் இணைக்காத சாதனைகளை கூட மக்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக சார்ஜ் குறைகிறது என்பது பற்றிய கவலை இன்றி போனை பயன்படுத்தலாம்.
இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மற்றொரு அம்சம் தான் இன்பினிக்ஸ் எக்ஸ்ட்ரீம் டெம்ப் பேட்டரி (Infinix Extreme- Temp Battery) தொழில்நுட்பம். இது -40°C to 60°C வரையிலான மிகுந்த குளிர்பிரதேசங்களில் பேட்டரியை (Battery) விரைவாகவும், பாதுகாப்பாகவும் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸ் (Performance) மற்றும் பாதுகாப்பை (Safety) பலப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








