iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) சாதனங்களில் மட்டும் இதுவரை காணப்பட்டு வந்த வயர்லெஸ் மேக் சார்ஜ்ர் தொழில்நுட்பத்தை இப்போது ஒரு புதிய ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் சாதனம் பெற்றுள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய பிராண்டில் இருந்து இந்த அம்சம் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன் என்றதும் சாம்சங் (Samsung) ஒன்பிளஸ் (OnePlus) என்று பெரிய பிராண்டுகளை நினைத்துவிடாதீர்கள். யாரும் எதிர்பார்த்திடாத வகையில் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்திடம் இருந்து இந்த புதிய வயர்லெஸ் மேக் சேஃப் (MagSafe) தொழில்நுட்பம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் மட்டும் கிடைத்து வந்த மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இனி ஆண்ட்ராய்டு போனிலும் கிடைக்கப் போகிறது.

ஐபோனில் இருப்பது போன்ற வயர்லெஸ் மேக்னெட்டிக் சார்ஜ் தொழில்நுட்பம்:
ஆப்பிள் ஐபோனில் இருக்கும் மேக் சேஃப் சார்ஜர் தொழில்நுட்பத்தை பெரும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனமாக இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் வரிசை சாதனம் வெளிவரவுள்ளது. இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்த வருடம் முழு வீச்சில் வேலை செய்வது போல் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்பினிக்ஸ் இப்போது அதன் அடுத்த ஸ்மார்ட்போன் சாதனங்களை மேக்சார்ஜ் டெக்னாலஜியுடன் (Magnetic wireless charging technology) அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வரிசையில் 4 ஸ்மார்ட்போன் சாதனங்கள் வெளிவருமென்று கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில், இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40), இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 4ஜி (Infinix Note 40 Pro 5G), இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G), மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Infinix Note 40 Pro+ 5G) என்ற சாதனங்கள் வெளிவரவுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் வரிசையில் உள்ள 4 ஸ்மார்ட்போன் சாதனங்களில் எல்லாவற்றிலும் 20W மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை இன்பினிக்ஸ் நிறுவனம் "MagCharge technology" என்ற பெயருடன் பிளிப்கார்ட் தளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இப்போது லைவ் செய்யப்பட்டுள்ள பிளிப்கார்ட் விளம்பரத்தின் மூலம் Infinix Note 40 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று தெரிகிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போன் சாதனம் 6.78 இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. ப்ரோ மாடல்கள் கூடுதல் ரெஃப்ரஷ் ரேட் மட்டும் உயர்தர பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 2 சாதனங்கள் MediaTek Helio G99 Ultimate சிப்செட்டை கொண்டிருக்கும், மற்ற 2 போன்கள் MediaTek Dimensity 7020 சிப்செட்டை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வரவிருக்கும் புதிய இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போன் சாதனங்கள் 8ஜிபி ரேம் முட்டைஹல் 12ஜிபி ரேம் வரையிலான மாடல்களாக 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இதில் 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை 5000mAh கொண்ட பேட்டரியுடன் 70W வரையிலான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








