திடீர் பரபரப்பு.. பட்ஜெட் விலை.. வயர்லெஸ் சார்ஜிங்.. 1TB மெமரி.. Infinix லீக் தகவலே அதிருது.. இன்னும் என்ன?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்த வருடம் கடுமையாக உழைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும்மில்லை. இன்பினிக்ஸ் பிராண்டின் கீழ் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை 4ஜி மற்றும் 5ஜி என்று இரண்டு தரப்பிலும் சமரசம் செய்யாமல் களமிறக்கியுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் இன்பினிக்ஸ் ஹாட் 40 சீரிஸ் (Infinix Hot 40 Series) மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் (Infinix Smart 8 Series) ஸ்மார்ட்போன் சாதனங்களை டிசம்பர் மாதம் பல சந்தைகளில் நிறுவனம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் (Infinix Note 40 Series) மீது கவனம் செலுத்துவது போல் தெரிகிறது.

தெரியாதவர்களுக்கு, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) சாதனம் ரூ.6,299 விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது மலிவு விலையில் சிறந்த அம்சங்களை வழங்குகிறது. அடுத்தபடியாக, இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவிருக்கும் புதிய இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) ஸ்மார்ட்போன் குறித்த விபரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த சாதனம் இப்போது NBTC தாய்லாந்து தளத்தில் காணப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro):
இதற்கு முன்பும் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சாதனம் பற்றிய சில லீக் தகவல்கள் இணையத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளிவந்தது. அப்போது, இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சாதனம் மாடல் எண் X6850 உடன் ப்ளூடூத் எஸ்ஐஜி (Bluetooth SIG) அத்தாரிட்டி வலைத்தளத்தில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth 5.3 connectivity) உடன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் ஒரு முறை, இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சாதனம் வேறொரு இணையதள பக்கத்தில் காணப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ சாதனம் வயர்லெஸ் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை அடக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இன்பினிக்ஸ் நோட் 30 சீரிஸ் சாதனம் 68W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை ஆதரித்தது. மிக விரைவில் இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் அறிமுகம் செய்யவிருப்பதினால், வரவிருக்கும் புதிய போனில் இந்த சார்ஜிங் அம்சங்களை நாம் கூடுதல் மேம்பாட்டுடன் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விலை (Infinix Note 40 Pro Expecting Price):
இன்பினிக்ஸ் நோட் 30 சீரிஸ் சூப்பர் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம், பட்ஜெட் விலையில் மக்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் அனுபவம் கிடைத்தது என்பதே என்று கூட நாம் கூறலாம். இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) சாதனமும் கூட இந்திய சந்தையில் ரூ.23,990 என்ற பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சாதனம் 6.82" இன்ச் உடன் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 (MediaTek Dimensity 700 SoC) உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB ரேம் (RAM) + 256GB ஸ்டோரேஜ் (Storage) மற்றும் 1TB மெமரியுடன் (Memory) வெளிவரும் என்று கூறப்படுகிறது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது ட்ரிபிள் கேமரா அம்சம் இடம்பெறும்.
இதில் 108 MP + 13 MP + 2 MP போன்ற 3 ரியர் கேமரா சென்சார்கள் (Triple rear camera) இடம்பெறும். முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 32MP செல்பி சென்சாரை கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 5ஜி (5G Network) நெட்வொர்க்கில் இயங்கும் போனாக வெளிவரும்.


Click it and Unblock the Notifications