Home
News

மிடில் கிளாஸ் 5G போன்.. புது அம்சத்துடன் வெளிவரும் Infinix Note 40.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

இன்பினிக்ஸ் (Infinix) பிராண்ட் அதன் புதிய இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) என்ற 2 ஸ்மார்ட்போன் சாதனங்களை வெளியிடவுள்ளது.

இதற்கு முன்பாக, இந்த போன்கள் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்ச விவரங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற போகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் 5G போன்.. புது அம்சத்துடன் வெளிவரும் Infinix Note 40..

மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் (MediaTek Helio G99 SoC) உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிழ் தளமானது ஸ்மார்ட்போன்களின் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம், இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலின் (Infinix Note 30 5G) வாரிசாக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro):

இந்த சாதனம் கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதன் அடுத்த தலைமுறை மாடலாக புது இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் வரவிருக்கிறது. இதன் கீழ் இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) என்ற 2 சாதனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் முறையே X6853 மற்றும் X6850 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8ஜிபி ரேம் உடன் வெளிவரும் என்று கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) பட்டியல் விபரம் காண்பிக்கிறது. ஆண்ட்ராய்டு 14 உடன் இது XOS 14 இயங்குதளத்தில் இயங்குகிறது.

மிடில் கிளாஸ் 5G போன்.. புது அம்சத்துடன் வெளிவரும் Infinix Note 40..

இன்பினிக்ஸ் நோட் 40 (Infinix Note 40) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சிறப்பம்சம் (Infinix Note 40 Pro Specifications):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் MediaTek Helio G99 உடன் 2 கோர்டெக்ஸ் A76 கோர் உடன் கூடிய 2.2GHz கிளாக் ஸ்பீட் உடன் ARM Mali G57 GPU ஆதரவை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் சாதனமானது 2436 x 1080 பிக்சல் உடன் கூடிய Full HD+ டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று பட்டியல் காண்பிக்கிறது.

இதில் X6853 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 40 ஸ்மார்ட்போன் டிவைஸ் 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இதன் ப்ரோ மாடல் வேரியண்ட் ஆன இன்பினிக்ஸ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனமும் இதே சார்ஜிங் அம்சங்களை கொண்டுள்ளது என்று வலைத்தள விபரங்கள் தெளிவாக காண்பிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் ஏதோவொரு மாடல் சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று மற்றொரு லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இது எந்த ஸ்மார்ட்போன் மாடல் என்பது விரைவில் தெரிய வரும். அப்போது உங்களுக்கு அப்டேட் செய்கிறோம். இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40 and Infinix Note 40 Pro Spotted In Google Play Console Site MediaTek Helio G99 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X