Home
News

புது போன் வாங்குற ஐடியா இருக்கா? அப்போ இந்த Infinix Note 30 5G போனை பாருங்க!

இன்பினிக்ஸ் நிறுவனம் அடுத்தபடியாக விரைவில் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி என்ற ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக இந்த சாதனத்தின் முக்கிய விபரங்கள் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Infinix நிறுவனம் ஜூன் நடுப்பகுதியில் இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்திருந்தது. Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய தகவலை நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு, டீஸ் செய்தது. இன்பினிக்ஸ் நோட் 30 தொடரின் மற்ற போன்களுடன் கடந்த மாதம் இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

புது போன் வாங்குற ஐடியா இருக்கா? இந்த Infinix Note 30 5G போனை பாருங்க!

இந்த போன் JBL-ஆல் இயங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஜேபிஎல் வழங்கும் சவுண்ட், டிஸ்டார்ஷன் இல்லாத வால்யூம், டீப் பாஸ் மற்றும் ஜேபிஎல் இன் சிக்னேச்சர் சவுண்ட் அம்சத்துடன் கூடிய மேம்பட்ட ஆடியோவை உறுதியளிக்கிறது, குறிப்பாக இசையைக் கேட்கும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது பயனர்கள் மிகவும் துல்லியமான விபரங்களை இந்த அம்சத்தின் மூலம் ரசிக்க முடியும்.

Infinix Note 30 5G ஸ்மார்ட்போன் ஆனது 108MP கேமராவுடன், சினிமாட்டிக் ஃபிளேர்த் திறமையுடன் வீடியோக்களை படமாக்குவதற்கான ஃபிலிம் பயன்முறை மற்றும் குறைந்த-ஒளி படங்களுக்கான சூப்பர் நைட் பயன்முறையுடன், மிகவும் தெளிவான திறனுடன், குறைந்த இரைச்சலுக்கு உறுதியளிக்கிறது. முன் மற்றும் பின்பக்க கேமராக்களில் இருந்து ஒரே நேரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் டூயல் டிஸ்பிளே அம்சத்தையும் இது ஆதரிக்கிறது.

உங்களுக்கு நினைவூட்டும் வகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.78' இன்ச் முழு HD+ LCD டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6080 சிப்செட் உடன் இயங்கும். இது ஒரு 6nm சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது.

புது போன் வாங்குற ஐடியா இருக்கா? இந்த Infinix Note 30 5G போனை பாருங்க!

இந்த ஸ்மார்ட் போனின் பேட்டரி அம்சம் பற்றி பேசுகையில், இது 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இது 45W உடன்பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் வழங்குகிறது. இந்தியாவில் போனின் வெளியீட்டு தேதியை நாம் விரைவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.15,000 முதல் ரூ.17,999 என்ற விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களை குறைந்த விலையில் வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக பட்ஜெட் பிரியர்களை இந்த நிறுவனம் வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் தொடர்ந்து பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. முன்னணி பிராண்டுகளுடன் நேரடி போட்டியில் களமிறங்க இன்பினிக்ஸ் செய்யும் முயற்சிகளை கட்டாயம் பரப்பியாக வேண்டும்.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G with 108MP camera Launching Soon In India in This June
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X