Home
News

வாங்கமா விட மாட்டீங்க! ரூ.15000 பட்ஜெட்.. 108MP கேமரா, 16GB ரேம்.. கூடவே BYBASS சார்ஜிங்.. புது மாடல்!

ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போன்களில் இருக்கும் 16ஜிபி ரேம், மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு, பைபாஸ் சார்ஜிங், 108எம்பி கேமரா, ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் என்று ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே அதிரும் வகையில் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் விற்பனைக்கு வந்தது.

இவ்வளவு மலிவான பட்ஜெட்டில், அதிகப்படியான அம்சங்களை கொண்டிருக்கும் வகையில், இனிமேல் எந்த போனும் வெளியாக வாய்ப்பில்லை என்பதால், இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போனின் விற்பனை சக்கைபோடு போடுபோட்டு வருகிறது. சொல்லப்போனால், ஜூன் 22ஆம் தேதி போன் விற்பனைக்கு வந்தபோது இருந்த வரவேற்பு, இன்றளவும் குறையவில்லை.

ரூ.15000 பட்ஜெட்.. 108MP கேமரா, 16GB ரேம்! கூடவே BYBASS சார்ஜிங்!

இப்படிப்பட்ட வரவேற்பை பயன்படுத்திக்கொண்ட இன்பினிக்ஸ் நிறுவனம், இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனின் லெதர் பினிஷிங் கொண்ட புது மாடலை வெளியிட்டு மக்களிடையே கூடுதல் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த புது மாடலின் விற்பனை, ஜூன் 29ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் தொடங்கிவிட்டது. இந்த போனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. 15 5ஜி பேண்ட் சப்போர்ட் கொண்ட டூயல் நானோ சிம் கார்டு வசதி இருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிரியர்களை அசத்தும் வகையில் இருக்கும். ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.

அதன்படி 108எம்பி மெயின் (Main) கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultrawide Lens) + 2எம்பி மேக்ரோ லென்ஸ் (Macro Lens) கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த போனின் சிறப்பம்சமாக 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் வருகிறது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல், இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டெக்னாலஜி போனை சார்ஜிங் செய்யும்போது பயன்படுத்தினால், 70 சதவிகித எலக்ட்ரிசிட்டியை பேட்டரிக்கும், 30 சதவிகித எலக்ட்ரிசிட்டியை நேரடியாக மதர்போர்ட்டுக்கும் (Motherboard) அனுப்பும். இதன் காரணமாக பேட்டரி ஆபத்துக்களுக்கு இடமில்லை. அதேபோல, சார்ஜிங் செய்யும் போது ஏற்படும் ஹீட் முற்றிலும் தவிர்க்கப்படும்.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருக்கும், இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் ஸ்பீக்கர்களிலும் அசத்துகிறது. பிரபல ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் ஸ்பீக்கர்களையே கொண்டுள்ளது. இதனால், காலிங் மற்றும் மியூசிக் சவுண்ட்டிங்கில் கிரிஸ்டல் கிளியர் அனுபவத்தை பெறமுடியும். முன்னதாக, இந்த போன் மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வந்தது.

இப்போது, சன்செட் கோல்டு கலரில் லெதர் பினிஷிங் கொண்ட புது டிசைனில் வெளியாகியிருக்கிறது. இந்த டிசைன் முற்றிலும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஏற்கனவே, இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி வெறும் ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வந்த மிகப்பெரும் விற்பனையை செய்துவருகிறது. இப்போது, இந்த போனையும் அதே விலையில் ஆர்டர் செய்துகொள்ளலாம் என்பதால் மக்கள் போட்டிப்போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G Sunset Gold Sale In India Here is Price Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X