Home
News

இன்பினிக்ஸ் நோட் 11 அறிமுகம்: 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி இன்னும் பல!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனானது எல்டிபிஎஸ் அமோலெட் பேனலைக் கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 11 ப்ரோ

இன்பினிக்ஸ் நோட் 11 ப்ரோ

இன்பினிக்ஸ் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 11 ப்ரோ சாதனத்தின் வாரிசாக புதிய நோட் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் வெண்ணிலா மாடலுக்கான சில முக்கிய விவரக்குறிப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. அதன்படி இன்பினிக்ஸ் நோட் 11 தொடரின் வெண்ணிலா மாறுபாட்டை வெளியிட பிராண்ட் தற்போது தயாராக இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 11-க்கான விலை விவரங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11-க்கான விலை விவரங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11-க்கான விலை விவரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போன் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது செலஸ்டியல் ஸ்னோ, கிளேசியர் க்ரீன் மற்றும் கிராஃபைட் பிளாக் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பத்தில் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 11 விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் நோட் 11 விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் நோட் 11 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 1080x2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 100000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 100 சதவீதம் டிசிஐ-பி3 வண்ண வரம்பு மற்றும் 91 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி வசதி

மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி வசதி

ஹூட்டின் கீழ் வெளியான தகவலின்படி, ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 3ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி காரட் பயன்படுத்தி 2டிபி வரை விரிவாக்கம் செய்யக்கூடிய சேமிப்பு ஆதரவையும் கொண்டிருக்கிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

நோட் 11 ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் ஏஐ லென்ஸ் உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, கூடுதலாக அமைப்பில் 2 மெகாபிக்சல் பொக்கே சென்சார் வசதி ஆகியவை இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 மெகாபிக்சல் செல்பி வசதியைக் கொண்டுள்ளது. சாஃப்ட்வேர் அம்சத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் இன்ஃபினிக்ஸ் எக்ஸ்ஓஎஸ் 7.6 தனிப்பயன் உடன் இயங்குகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் இதில் இருக்கிறது. ப்ரோ மாடல் உடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் நோட் 11 ப்ரோ ஆனது ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அமோலெட் பேனல் 120 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

அதேபோல் சில தினங்களுக்கு முன்பு இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மர்ரட்போனின் விலை ரூ.9,000-என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருப்பு,நீலம் பச்சை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Infinix Note 11 Launched With 50MP Triple Camera, 5000 mAh Battery and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X