5000எம்ஏஎச் பேட்டரியுடன் விரைவில் களமிறங்கும் இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ மாடலை வரும் மே 13-ம் தேதி இந்தயாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 × 2040 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

64எம்பி கேமரா
இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராகள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள்,என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வைஃபை, 4ஜி, புளூடூத், ஜி.பி.எஸ்,3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications