Home
News

என்னது? மொபைல் விலையில் புது லேப்டாப் வாங்கலாமா? அடடே இவ்வளவு கம்மி விலையா? என்ன Laptop மாடல் இது?

அடடே.. அடடே இப்படி ஒரு நல்ல செய்திக்காக தானே நாங்கள் எல்லாம் காத்துக்கிடந்தோம் என்று மெச்சிக்கொள்ளும் அளவிற்கு, இந்திய சந்தையில் மிகமிக மலிவு விலையில் ஒரு அட்டகாசமான மற்றும் சக்தி வாய்ந்த லேப்டாப் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சக்தி வாய்ந்த மலிவு விலை லேப்டாப் சாதனத்தை இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் (Infinix INBook Y3 Max) என்ற பெயருடன் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அறிமுகம் செய்து, விற்பனையை துவங்கியுள்ளது. இந்த லேப்டாப் அம்சங்கள் என்ன? இதன் விலை என்ன? இதோ முழு விபரம்.

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் (Infinix INBook Y3 Max Laptop) சாதனம் 16" அளவு கொண்ட FHD டிஸ்பிளேவுடன் மூன்று பிராசஸர் வேரியண்ட் மாடல்களாக விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 12th Gen i3 (8GB+512 GB) மாடல், i5 (16 GB + 512GB) மாடல், மற்றும் ஹை-எண்டு மாடலாக i7 (16GB+512 GB) போன்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்னது? மொபைல் விலையில் புது லேப்டாப் வாங்கலாமா? அடடே இவ்வளவு கம்மியா?

இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் (Infinix INBook Y3 Max Laptop):

புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் அலுமினியம் அலாய் பாடியுடன் 1.78 கிலோ எடையுடன் 17.9mm தடிமன் கொண்ட ஸ்லிம் லேப்டாப் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த லேப்டாப் சாதனம் அல்ட்ரா ரெஸ்பான்ஸ் மற்றும் டாக்டைல் பேக்லைட் கீபோர்ட் போன்ற அம்சங்களுடன் 7.06" இன்ச் அளவு கொண்ட பெரிய டச்பேட் ஆதரவுடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனம் 1080P வெப்கேம் உடன் டூயல் மைக் அம்சத்துடன் வருகிறது.

இதன் மூலம் கிரிஸ்டல் கிளியர் வீடியோ கால் அழைப்புகளை நீங்கள் இந்த லேப்டாப் மூலம் அனுபவிக்க முடியும். லேப்டாப் சூடாவதை தடுக்க இதில் ஐஸ் கூலிங் டெக்னாலஜி தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது. இந்த லேப்டாப் 70Wh பேட்டரி உடன் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை USB-C போர்ட் மூலம் வழங்குகிறது. இந்த லேப்டாப் சாதனம் 8GB / 16GB LPDDR4X, 256GB / 512GB NVMe PCIe 3.0 SSD போன்ற விருப்பங்களில் வருகிறது.

இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் (Infinix INBook Y3 Max Laptop) டிவைஸ் விண்டோஸ் 11 (Windows 11) உடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனம் வைஃபை 6 802.11 ax (Wi-Fi 6 802.11 ax 2.4GHz and 5GHz) இணைப்பு அம்சம், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), 1 x USB-C சார்ஜிங் & டேட்டா டிரான்ஸ்பர் போர்ட்,

இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் விலை (Infinix INBook Y3 Max Laptop Price):

1 x USB-C டேட்டா டிரான்ஸ்பர் போர்ட், 2 x USB 3.0 போர்ட், 1 x HDMI 1.4 போர்ட் மற்றும் 1 x SD கார்ட் ஸ்லாட் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் சாதனம் 3.5mm ஹெட்போன்ஸ் மற்றும் ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டிஜிட்டல் மைக்ரோபோன்ஸ், DTS ஆடியோ, போன்ற பல அம்சங்களை அடக்கிய லேப்டாப் சாதனமாக வெளிவந்துள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் Y3 மேக்ஸ் லேப்டாப் (Infinix INBook Y3 Max Laptop) சாதனம் இந்தியாவில் சில்வர் மற்றும் ப்ளூ நிறத்தில் ரூ. 29,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் இப்போது இந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கலாம். இது i3 பிராசஸர் கொண்ட மாடலின் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBOOK Y3 Max Laptop Launched In India Starting Rs 29990 Flipkart Sale August 21 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X