Home
News

பக்கா பட்ஜெட் விலையில் புதிய 14-இன்ச் லேப்டாப்.. 16GB ரேம், i7 ப்ராசஸர், 50Wh பேட்டரி வேற.. என்ன மாடல்?

ஜியோ,லெனோவா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்த விலையில் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வந்தாலும், அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் என்னவென்றால் அந்த லேப்டாப் மாடல்களில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் ஜியோ,லெனோவா உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக தரமான லேப்டாப் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் (Infinix INBook X3 Slim) எனும் பெயரில் இந்த புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பக்கா பட்ஜெட் விலையில் புதிய 14-இன்ச் லேப்டாப்.. என்ன மாடல்?

குறிப்பாக இந்த புதிய லேப்டாப் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ரெட், கிரீன், கிரே,ப்ளூ நிறங்களில் கிடைக்கும் இந்த லேப்டாப். இப்போது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் அம்சங்கள் (Infinix INBook X3 Slim specifications): 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது. குறிப்பாக 100 சதவீதம் எஸ்ஆர்ஜிபி ( 100% sRGB), 72 சதவீதம் (NTSC),300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்ப அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடலின் டிஸ்பிளே.

இந்த லேப்டாப் ஆனது 4.4ஜிகாஹெர்ட்ஸ் 12வது ஜென் இன்டெல் கோர் ஐ3-1215யு பிராசஸர் (4.4GHz 12th Gen Intel Core i3-1215U processor) உடன் யுஎச்டி கிராபிக்ஸ் (Intel UHD Graphics) ஆதரவைக் கொண்டுள்ளது. இதுதவிர 4.4ஜிகாஹெர்ட்ஸ் 12வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1235யு (4.4GHz 12th Gen Intel Core i5-1235U) மற்றும் 4.7ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ7-1255யு (4.7GHz Core i7-1255U) பிராசஸர் ஆதரவு கொண்ட ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ( Iris Xe Graphics) வசதியுடன் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது.

8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது. மேலும் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் மாடலில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய லேப்டாப் மாடலில் விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.

720 பிக்சல் எச்டி வெப்கேம் (720P HD Webcam) ஆதரவைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப். பின்பு இதில் டூயல்-ஸ்டார் எல்இடி பிளாஷ் லைட் ஆதரவும் உள்ளது. எனவே இது வீடியோ அழைப்புகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50Wh பேட்டரியுடன் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W யுஎஸ்பி டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை 55 நிமிடங்களில் 60 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 10 மணி நேரம் இந்த லேப்டாப் வீடியோ பிளேபேக் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.

பக்கா பட்ஜெட் விலையில் புதிய 14-இன்ச் லேப்டாப்.. என்ன மாடல்?

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப். மேலும் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோஃபோன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ அம்சம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் லேப்டாப்.

விலை மற்றும் விற்பனை: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்3 ஸ்லிம் லேப்டாப் மாடலை வாங்க முடியும். 8ஜிபி + 512ஜிபி ஐ3 மாடலின் விலை ரூ.33,990. 16ஜிபி + 512ஜிபி ஐ5 மாடலின் விலை ரூ.39,490 மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஐ7 மாடலின் விலை ரூ.49,990.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBook X3 Slim Laptop Launched in India: Check Price,Specifications And Availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X