ரூ.50,000 கூட இல்லை.. இப்படியொரு Laptop-ஆ? 14 இன்ச் டிஸ்பிளே.. ஸ்லிம் டிசைன்.. கலக்கலான AirPro+ மாடல் விற்பனை
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இப்போது 14'' இன்ச் அளவு கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப் சாதனத்தை நிறுவனம் இன்பினிக்ஸ் இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் (Infinix Inbook AirPro+) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக ஸ்லிம் லேப்டாப் என்றாலோ அல்லது ப்ரோ மாடல் என்றாலோ விலை அதிகமாக இருக்கும். ஆனால், இன்பினிக்ஸ் நிறுவனம் அப்படி செய்யவில்லை, இந்த புதிய Infinix Inbook AirPro+ லேப்டாப் மாடலை மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக இன்பினிக்ஸ் இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் (Infinix Inbook AirPro+) என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் சாதனத்தை நிறுவனம் ஹைலி போர்ட்டபிள் லேப்டாப் (highly portable laptop) சாதனத்தை 1 கிலோ எடையுடன் பவர்புல் லேப்டாப் சாதனமாக வெளிவந்துள்ளது. இது 13வது ஜென் இன்டெல் கோர் i5 பிராசஸர் உடன் 16GB ரேம் அம்சத்தை கொண்ட லேப்டாப் சாதனமாக வெளிவந்துள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் சிறப்பம்சம் (Infinix Inbook AirPro+ Specifications):
இதுவொரு 13th Gen Intel Core i5 processor லேப்டாப் என்பதனால், உங்கள் அன்றாட வேலைகளை எளிமையாக செய்ய இது அனுமதிக்கிறது. இந்த லேப்டாப் சாதனம் 1 கிலோ எடையுடன் (1kg weight laptop) வெறும் 4.5mm தடிமன் கொண்ட ஸ்லீக் மாடல் லேப்டாப் சாதனமாக வெளிவந்துள்ளது. பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் (MacBook Air) மாடல் போல காட்சியளிக்கிறது. அவ்வளவு ப்ரீமியமாக இது தோன்றுகிறது.
இந்த புதிய Infinix Inbook AirPro+ லேப்டாப் சாதனம் 14'' இன்ச் 2.8K OLED டிஸ்பிளேவுடன் (Display) வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 440 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peek brightness) ஆதரவை கொண்டுள்ளது. இதில் sRGB மற்றும் DCI-P3 color gamuts தொழில்நுட்பங்கள் உள்ளது. இது மிகவும் துல்லியமான மற்றும் கிரிஸ்பான வீடியோ தரத்தை வழங்குகிறது.
இதன் பெர்பார்மன்ஸ் பற்றி பேசுகையில், இது i5 1334U பிராசஸர் (processor) உடன் Intel Iris Xe graphics ஆதரவையும் கொண்டுள்ளது. இது 16GB of LPDDR4X 4267MHz ரேம் (RAM) மற்றும் 512GB PCIe Gen 3 SSD ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இது AI உடன் இயங்கும் கோ-பைலட் (Co-Pilot) பாட்டன் ஆதரவை கொண்டுள்ளது. இது பேக்லைட் கீபோர்ட் (backlit keyboard), FHD+ IR வெப்கேம் (Webcam) போன்றவற்றை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் விலை (Infinix Inbook AirPro+ Price):
இந்த Infinix Inbook AirPro+ லேப்டாப் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இதன் விற்பனை வரும் அக்டோபர் 22, 2024 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Infinix Inbook AirPro+ லேப்டாப்பை நிறுவனம் ரூ. 49,990 என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








