ரூ.12000 விலை.. ஐபோன் 16 கேமரா மாதிரி லுக்.. ஐபோனுக்கு முன் அறிமுகமாகும் புது Infinix மொபைல்.. என்ன ஸ்பெஷல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் புதிதாக இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகத்தை இன்பினிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) அறிமுகத்திற்கு முன்பாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் புதிய Infinix Hot 50 5G போனில் ஐபோன் 16 தொடரில் இருப்பது போன்ற கேமரா இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் வரும் செப்டம்பர் 6, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்ற அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிமுகத்தை உறுதி செய்யும் விதமாக, அதிகாரப்பூர்வ மைக்ரோசைட், விளம்பரங்கள் போன்றவற்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G):
இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) போனின் கேமரா வடிவமைப்பு, இப்போது வெளியாகவிருக்கும் ஐபோன் (iPhone) தொடரில் எதிர்பார்க்கப்படும் வெர்ட்டிக்கல் கேமரா அமைப்பு போன்ற அமைப்பிலேயே இந்த இன்பினிக்ஸ் மார்ட்போனிலும் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐபோன் சாயலால் இருப்பதினால் இதற்கு இந்தியாவில் மவுசு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர மற்ற எந்த அம்சமும் ஐபோன் போன்று இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.
காரணம், புதிய இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) முன்பக்கம் வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் வருகிறது. இதன் டிஸ்பிளே வெட் டச் பங்க்ஷன் (Wet touch function) அம்சத்துடன் வருகிறது. உங்கள் கை ஈரமாக இருந்தாலும் கூட, இந்த டிஸ்பிளேவை நீங்கள் இயக்க முடியும். இந்த போனின் இடது புறத்தில் சிம் கார்டு ஸ்லாட் (SIM card slot) போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint sensor) இடம்பெறுகிறது. போனின் அடிப்பாகத்தில் என்ன இருக்கிறது என்பதை நிறுவனம் காண்பிக்கவில்லை. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் சாதனம் IP54 ரேட்டிங் உடன் பிளாக் (black), ப்ளூ (blue) மற்றும் க்ரீன் (green) நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி வரிசையில் மொத்தம் எத்தனை போன் (How many phones are in Infinix Hot 50 5G series):
இந்த புதிய மொபைல் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 (Mediatek Dimensity 6300) சிப்செட் உடன் 4GB ரேம் மற்றும் 8GB ரேம் விருப்பத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Infinix Hot 50 5G சீரிஸ் மாடலில் மொத்தம் 5 மாடல்கள் அறிமுகமாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் இன்பினிக்ஸ் ஹாட் 50 (Infinix Hot 50), இன்பினிக்ஸ் ஹாட் 50 ப்ரோ (Infinix Hot 50 Pro), இன்பினிக்ஸ் ஹாட் 50 ப்ரோ பிளஸ் (Infinix Hot 50 Pro+), இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 50i (Infinix Hot 50i) போன்ற மாடல்கள் இடம்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 50 சீரிஸ் போன்கள் ரூ.12,000 முதல் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








