1 இல்லை 2 போனா வாங்கலாம்.. வெறும் 8000 விலையில் ஒரு வரப்பிரசாதம்.. 2TB ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
ரூ. 10,000 விலைக்குள் நீங்கள் ஒரு பவர்புல் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க திட்டமிட்டால், இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதன் விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. இதன் விலை பற்றிய விபரங்கள் இதோ.
Infinix Hot 40i: புதிய இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக இது ரூ.10,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இதற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதன் டிமாண்ட் அதிகரிக்க முக்கிய காரணம், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16GB ரேம் உடன் அட்டகாச நன்மைகளை பேக் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i): இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல், அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
விலை என்ன? இன்பினிக்ஸ் நிறுவனம் இதை இப்போது நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) சாதனம் பாம் ப்ளூ, ஸ்டார்ஃபால் கிரீன், ஹரிஜோன் கோல்ட் மற்றும் ஸ்டார்லிட் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது.
சலுகை விலை: இருப்பினும், இதன் முதல் விற்பனையில், வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த போன் இப்போது ரூ. 8,999 விலையில் கிடைக்கிறது.Infinix Hot 40i ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரை, 32MP செல்ஃபி கேமராவுடன் வரும் செக்மென்ட்டில் முதல் ஸ்மார்ட்போன் இது என்று நிறுவனம் கூறுகிறது. Infinix இன் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில், 6.6" இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே: இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே வீதத்தை ஆதரிக்கிறது. இதனுடன் ஐபோன் 15 போன்று டைனமிக் ஐலேண்ட் அம்சமும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. Infinix Hot 40i ஆனது UniSoc T606 சிப்செட் உடன் வருகிறது. இது 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இந்த பட்ஜெட் சாதனம் விர்ச்சுவல் ரேம் ஸ்டோரேஜ்ஜையும் ஆதரிக்கிறது.
2TB ஸ்டோரேஜ்: இதனால், 16ஜிபி ரேம் வரை இந்த போனில் விரிவாக்க முடியும். அதேபோல், இதன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஃபோனின் மெமரியை நீங்கள் 2TB வரை அதிகரிக்க முடியும். வெறும் ரூ.9,999 விலையில் 2TB ஸ்டோரேஜ் உடன் வாங்க கிடைக்கும் சாதனமாக இது திகழ்கிறது. இது 50MP + AI கொண்ட டூயல் கேமரா அம்சத்தை வழங்குகிறது.
பேட்டரி: முன்பக்கத்தில் இது 32MP முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும். இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த பட்ஜெட் போனை இயக்க, 5,000mAh பேட்டரியை வழங்குகிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது USB Type C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, இது ஒரு பக்கம் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளது. இது தவிர மேஜிக் ரிங் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications