பிளிப்கார்ட் : இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஹாங்காங்கை சார்ந்த மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது அதிரடி விலைகுறைப்பை அறவித்துள்ளது, இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இதுவரை ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விலைகுறைப்பு:
இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இதுவரை ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இப்போது ரூ.6,999-விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு(1280 x 720) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

குவாட்-கோர்:
இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications