Home
News

ரூ.8000 பட்ஜெட்ல கிங் இனி இந்த Mobile தானா? சந்தேகமே இல்லாமல் வாங்கலாமா? வேண்டாமா?

இந்தியாவில் அதிகமாக புது மொபைல் விற்பனையாகும் பிரிவு என்றால், அது ரூ.6,000 முதல் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களாகும். என்ன தான் இந்தியாவில் பல விலை பிரிவுகள் இருந்தாலும், மக்களின் கவனம் எப்போதும் இந்த மலிவு விலை பிரிவில் பதிந்திருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Infinix Hot 30i என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. சமீபத்திய ஹாட் சீரிஸ் போன் ஆனது MediaTek Helio G37 சிப்செட் மற்றும் 8GB ரேம் மூலம் இயக்கப்படுகிறது. Infinix Hot 30i ஆனது LED ஃபிளாஷ் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 50MP கேமராவை மலிவு விலையில் வழங்குகிறது. மலிவு விலையில் பெஸ்ட் போனை வாங்க வேண்டுமா?

ரூ.8000 பட்ஜெட்ல கிங் இனி இந்த Mobile தானா? சந்தேகமில்லாமல் வாங்கலாமா?

அப்படியானால், உங்கள் லிஸ்டில் Infinix Hot 30i போன் இருப்பதும் முக்கியமானது. இது ரூ.8000 விலை பிரிவில் உங்களுக்கு தேவையான அணைத்து அம்சங்களையும் கவர் செய்கிறது. சரி, இந்த விலையில், இந்த போனில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா? இந்த மொபைலை நாம் நம்பி வாங்கலாமா வேண்டாமா என்று தெரிந்துகொள்ளலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

Infinix Hot 30i ஸ்மார்ட்போன் ஆனது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் கொண்ட HD+ உடன் 1612 × 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 500 nits பீக் பிரைட்னெஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 6.6' இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பேனல் 180Hz டச் சாம்பிளிங் மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது. இது பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது வாட்டர்-டிராப் நாட்ச்சை கொண்டுள்ளது.

இந்த சாதனம் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G37 சிப்செட் உடன் வருகிறது. இது ஒருங்கிணைந்த மாலி ஜி57 ஜிபியுவைக் கொண்டு வருகிறது. இது 8 ஜிபி மெமரி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மெம்ஃப்யூஷன் தொழில்நுட்பத்துடன், இது எக்ஸ்பெண்டபிள் ரேம் அம்சத்துடன் வருகிறது. இதன் மேல் 8ஜிபி வரை நீட்டிக்க முடியும். இது மற்ற 8000 விலை பிரிவு போன்களில் பெரிதாக காணப்படுவதில்லை.

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட XOS 12 உடன் வருகிறது. கேமரா பற்றி பேசுகையில், Infinix Hot 30i ஆனது 50MP ப்ரைமரி ஷூட்டரைக் கொண்ட டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாதனத்தில் உள்ள முதன்மை கேமரா AI லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 5MP செல்பி ஷூட்டருடன் வருகிறது. இது டூயல் எல்இடி ஃபிளாஷ் உடன் ஆதரிக்கப்படுகிறது.

இந்த Infinix Hot 30i சாதனம் 5000mAh பேட்டரி உடன் 10W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றங்களுக்கு டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1TB வரை SD கார்டு மூலம் கூடுதல் ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. இதற்காக பிரத்தியேக மைக்ரோ-SD கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பற்றி பேசுகையில், இது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை வழங்குகிறது.

Infinix Hot 30i ஆனது Mirror Black மற்றும் Glacier Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இதன் 8GB + 128GB வேரியண்ட் மாடலின் விலை ரூ.8999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வருகிறது. 8000 ரூபாய் விலை பிரிவில் வாங்க கிடைக்கும் சிறந்த சாதனமாக இது இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30i Could Be The King Of Budget Smartphones Under Rs 8000 in 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X