Home
News

Infinix Hot 30 Play போன் இருந்தா சார்ஜ்ஜரை அடிக்கடி தேட மாட்டீங்க! இது உங்க மூளையையும் போனையும் சூடாக்காது!

ஸ்மார்ட்போனில் என்ன தான் பல பார்ட்ஸ்கள் இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போன் செயல்பட அதற்கு சக்தி அவசியமாகிறது. ஒரு ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், கட்டாயம் அதன் பேட்டரி அதிக சக்தியை கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய சக்தியை கொண்டு வெளிவரும் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில், வழக்கத்திற்கு மாறாக அதிக சக்தி கொண்ட பேட்டரியுடன் வெளிவந்துள்ள புதிய டிவைஸ் தான் இந்த Infinix Hot 30 Play. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ.15,000 விலைக்குள் விற்பனையாகும் பட்ஜெட் செக்மென்ட்டில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6000mah திறன் கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது.

Infinix Hot 30 Play போன் இருந்தா சார்ஜ்ஜரை அடிக்கடி தேட மாட்டீங்க!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம், நைஜீரியாவில் தனது பிராண்டை விரிவுபடுத்தி வருகிறது. இதன் விளைவாக இன்பினிக்ஸ் ஹாட் 30 பிளே (Infinix Hot 30 Play) என்ற புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் முக்கியமான சிறப்பம்சமே நாம் முன்பே சொன்னது போல இது 6000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியுடன் இன்னும் பல முக்கியமான சிறப்பம்சங்களை பட்ஜெட்டிற்குள் அடக்கியுள்ளது.

இந்த சாதனம் கிராஃபைட் கூலிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. அதேபோல், இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 பிளே ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பை இந்த போன் கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Infinix Hot 30 Play டிவைஸ் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. Infinix Hot 30 Play போனின் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம். முதலில் இந்த போன் ஆனது HD+ திறனுடன் 6.82' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே பஞ்ச்-ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை, 500 nits பீக் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது. இந்த புதிய Infinix Hot 30 Play சாதனம் MediaTek Helio G37 சிப்செட் உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 16MP பிரைமரி கேமரா மற்றும் AI லென்ஸ் அடங்கிய டூயல் பின்புற கேமரா அமைப்பை ஆதரிக்கிறது.

Infinix Hot 30 Play போன் இருந்தா சார்ஜ்ஜரை அடிக்கடி தேட மாட்டீங்க!

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இந்த Infinix Hot 30 Play சாதனம் அதன் முன்பக்கத்தில் 8MP செல்பி ஷூட்டர் கேமராவை கொண்டுள்ளது. புதிய Infinix சாதனம் 6000mAh பேட்டரியில் இருந்து சக்தியைப் பெறுகிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த Infinix Hot 30 Play சாதனம் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான XOS 12.6 இல் இயங்குகிறது.

இந்த சாதனத்தில் உள்ள இணைப்பு விருப்பங்களை பற்றி பார்க்கையில், இது 4G VoLTE, GPS, FM ரேடியோ, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான USB-C போர்ட் போன்றவற்றை அடக்கியுள்ளது. போனின் பாதுகாப்பிற்காக பயோமெட்ரிக்ஸுக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Infinix Hot 30 Play சாதனம் ஆனது போறா பர்பிள் (Bora Purple), மிராஜ் வைட் (Mirage White) மற்றும் பிளேடு பிளாக் (Blade Black) நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை நைஜீரியாவில் NGN 80,000 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பு படி, இந்த சாதனத்தின் விலை தோராயமாக ரூ. 14,200 என்ற விலையை நெருங்குகிறது. இந்தியாவில் இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 30 Play Budget Smartphone Launched With 6000mah Battery and Dual Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X