Home
News

மூன்று கேமரா, 64 நாள் பேட்டரி ஆயுள்- ரூ.11,300 என்ற விலையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவுகளில் மிகவும் பிரபலமடைந்த ஒன்றாகும். இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு தயாராகி வரும் இதே நேரத்தில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனை நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது பெரிய எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ சிறப்பம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ சிறப்பம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடனான 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 720 x 1612 பிக்சல்கள் தீர்மானத்தோடு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. இந்த இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனின் நிலையான புதுப்பிப்பு வீதம் 60 ஹெர்ட்ஸ் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது 400 நிட்ஸ் பிரகாசம் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா அம்சத்தோடு வருகிறது.

பின்புறத்தில் மூன்று கேமரா ஆதரவு

பின்புறத்தில் மூன்று கேமரா ஆதரவு

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனின் இமேஜிங் ஆதரவுக்கு என பின்புறத்தில் மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போன ஆனது 13 எம்பி முதன்மை கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான ஒரு ஜோடி துணை கேமராக்களை கொண்டிருக்கிறது. அதேபோல் இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனில் கண் காணிப்பு, சூப்பர் நைட் மோட், ஸ்லோ மோஷன் வீடியோ ரெக்கார்டிங் 240 எஃப்பிஎஸ் மற்றும் முழு எச்டி 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மாரர்ட்போனில் ஒலி தரம் மற்றும் சத்தத்தை அதிகரிக்க டிடிஎஸ் மேம்படுத்தல் ஆதரவைக் கொண்டுள்ளது. சமீபத்திய இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

இணைப்பு ஆதரவுகள் குறித்த விவரங்கள்

இணைப்பு ஆதரவுகள் குறித்த விவரங்கள்

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. அதேபோல் 34 மணிநேர டாக் டைம் நேரம், 64 நாட்கள் வரை காத்திருக்கும் நேர ஆதரவை இந்த பேட்டரி அம்சம் வழங்குகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளுக்கு என இரட்டை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆதரவோடு வருகிறது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும். இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.11,300 என இருக்கிறது. அதேபோல் இது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.12,200 ஆக இருக்கும். இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஸ்மார்ட்போனானது ரேசிங் ப்ளாக், ஹேஸ் க்ரீன், ஹொரைசன் ப்ளூ மற்றும் ஷாம்பெயின் கோல்ட் ஆகிய பல்வேறு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 இந்தியா வெளியீடு

இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 இந்தியா வெளியீடு

இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலமாக கிடைக்கும். இந்த ஆன்லைன் தளம் இதன் வருகையை டீஸ் செய்திருக்கிறது. முன்னதாகவே இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்தது. பிளிப்கார்ட்டில் வெளியான டீசரின்படி, இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் 6.67 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ச் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 12i Announced With Triple Camera, Large HD+ Diplay: Expected Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X